News Update :
Home » » வல்வெட்டித்துறையின் பராம்பரியமான இந்திரவிழா

வல்வெட்டித்துறையின் பராம்பரியமான இந்திரவிழா

Penulis : anpusanthosh on Tuesday, July 16, 2013 | 8:21 AM

யாழ்ப்பாண வரலாற்று பராம்பரியம் மிகவும் அரியது. தொன்மையானது. அதை இற்றை வரை பேணிக்காக்கும் சமுதாயம் மருவிக் கொண்டு சென்றாலும் வரலாற்றின் முற்பட்ட காலம் தொட்டே வாணிபத்தை பிரதான தொழிலாக கொண்ட யாழ் வல்வெட்டித்துறை பிரதேசம் இன்றும் யாழ் வாழ்வியலை பேணுகின்ற பிரதேசமாக திகழ்ந்து வருகின்றது. யாழ் மாவட்டத்தின் எந்த பிரதேசத்திலும் காணமுடியாத சில நிகழ்வுகள் விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக களைகட்டி நிற்பதை காணமுடியும்.

அவ்வாறு இடம் பெறும் விழாக் கோலங்களில் இன்று பலரும் அறிந் திராத ஒன்றே இந்திரவிழா ஆகும்.
இவ் இந்திரவிழாவானது ஒவ்வொரு வருடமும் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் தீர்த்தத் திருவிழா அன்று இரவிரவாக நடை பெறும். ஆனால் கடந்த சில வருடங்களாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை  காரணமாக இவ்வாறான விழாக்கள்; அடக்கமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு மீளவும் இவ் விழாவானது புத்துயிர் பெற்று இவ் வருடம் வெகு விமரிசையாக கொண்டாடப்படடது
விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான 'இந்திர விழா' மறுநாள் அதிகாலைவரை நடைபெற்றது.  ஆலயத்திலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரம் வரை உள்ள தெருக்கள் எங்கும்   மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்வுகளுக்காக  ஏழு அரங்குகளும் அமைக்கப்பட்டன.  விவாத அரங்கம், நாட்டியாஞ்சலி, இசை நிகழ்வுக்கென.  மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளும் என ஒரே ஆரவாரமாக ஊரே களைகட்டி நின்றது. இவ் 'இந்திர விழா'வில் தென்னிந்தியக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

.
இது பற்றி வேலாயுதம் மகலிங்கம் என்பவரிடம் கேட்டபோது ஆரம்ப காலங்களிலே இந்த இந்திரா விழாவனாது 5 வருடங்கட்கு ஒரு முறை இடம்பெற்றது. பிற்பட்ட காலங்களில் வருடந்தோறும் இடம் பெற்றது. கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிதாக கொண்டாடப்படவில்லை அதற்கு பிறகு இப்பத் தான் இதையொட்டி பசு, கன்று பிள் ளையார்சிலை  இராமன் சிலை என உருவங்கள் செய்யப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் முன்பு பெண்கள், குழந்தைகள் கோலாட்டம் ஆடியவாறு வந்தனர்.  இன்னொரு குழுவினர் கரகாட்டம் மயிலாட்டம் என தெருவெங்கும் ஆடியவாறு வந்தனர். மழைக்காகவும், நாடு செழிக்கவும் வேண்டி நிகழ்த்தப்படும்   இவ் இந்திரா விழாவின் மகிமை வடமராட்சி மண்ணின் மூலை முடுக்கெல்லாம் தெரியப்பட்டது கொண்டாடுகின்றோம்.

இந்த முறை பெரியளவிலை கொண்டாட ஏற்பாடு செஞ்சம். அதிலையும் பகுதி பகுதியாக ஏற்பாடு செஞ்சம். கிட்டத் தட்ட நெடியகாடு பிள்ளையார் கோவிலில் இருந்து சிவன் கோவில் வரைக்கும் மின் குமிழ்கள் பல்வேறு வடிவங்களில் சோடிக்கப்பட்டன.. இது தவிர பல்வேறுபட்ட சிலைகள் செய்யப்ட்டுள்ளன. 36 அடி உடைய பிள்ளையார் சிலை 48 அடி உடைய ராமன் சீதா சிலை என பல்வேறு பட்ட வடிவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
இதை தொடர்ந்து நெடியகாடு பிள்ளையார் ஆலய நிர்வாக உறுப்பினர் அ.செந்தில்நாதனிடம் இந் நிகழ்வு பற்றி கேட்ட போது எவ்வளவோ பணம் செலவு செய்து இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நெடியகாடு பிள்ளையார் பகுதி வாசிகளின் ஏற்பாட்டில் செய்யபட்ட நாட்டியரங்கு மேடையில் கலை இசைநாட்டிய நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இது தவிர புகை குண்டுகள் வானத்தில் பறக்க விடப்படுகின்றன. மேலும் எல்லோரது கண்களும் கவரும் வண்ணம் தீhத்தக் கேணிகளில் சுழுலும் வண்ணம் செய்யப்பட்ட பிள்ளையார் சிலை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
 இவ்வாறு நோக்கிய வண்ணம் சென்ற போது ஏழு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள் இசைக்கச்சேரிகள் இதில் குறிப்பிடக்கூடிய அம்சம் வீதியின் கீழ் பகுதியினுடாக மக்கள் பயணம் செய்ய அதன் மேல் மேடை அமைக்கப்பட்டு இசைக்கச்சேரிகள் நிகழ்த்தபட்டன. இது தவிர வான வேடிக்கைகள் ஒருபுறம்  கடலினுள் அமைக்கப்பட்ட மேடையினுள் இடம்பெற்ற இசைக்கச்சேரி இன்னொருபுறம் அதிலும் இசைக்கச்சேரியில் பங்குபற்றுவோர். படகினுள் சென்று பங்குபற்றி விட்டு மீண்டும் கரைக்கு வரும் சம்பவம் என்பன மக்களை பெரிதும் கவர்ந்தன.. இது தவிர பேயாட்டம் ; கதகளி ஆட்டம் சிறார்களை கவாந்திளுத்தன. இவைகளெல்லாம் நிகழ்வுகளாய் போக சடங்கு முறை மக்களை வியப்பில் ஆழ்த்தியது.. ஆண்கள் அம்மன் போல வேடம் பூண்டு உடுக்கு அடித்த வண்ணம் வேப்பிலைகளை உலுக்கியவாறு தெருவேங்கும் ஆடியவாறு கோவிலை நோக்கிச் சென்றனர். இதை விட மாபெரும் யாகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது இவ்வாறு இந்திரா விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பெரும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதுடன் இவ்வறான விழா இலங்கையின் எப்பகுதியிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger