தட்டிவான்! மறைந்து போன எம் அடையாளங்களில் ஒன்று இன்று இவ்வார்த்தை அறியப்படாத ஒன்றாகவே அருகி விட்டது. 2000ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்; தட்டிவான் பயணம் என்பது கேட்ட மாத்திரத்திலேயே மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் ஒர் பயணமாக அமைந்தது

இப்படிப்பட்ட வாகனம் யாழ்ப்பாணத்தில் 759 பாதையான பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் பொது மக்கள் போக்கு வரத்து சேவையை 50 ஆண்டு காலத்திற்கு மேல் வழங்கி வந்தது. ஆதிகாலை நேரம் 5.30 மணிக்லெ;லாம் பருத்தித்துறை பேருந்து நிலையத்திலிருந்த புறப்பட்டு விடும். மெதுவான வேகத்தில் மந்திகையை வந்தடையும். ஆன்றைய காலங்களில் கொடிகாமம் போக்குவரத்து சேவைக்கு தட்டிவானையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. முந்திகையை வந்தடைந்த தட்டிவான் சிறிது நேரம் நிறத்தப்படும. ஏனெனில்; மந்திகை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்கள் பிள்ளை பேற்றுக்கு வந்தோர் துணைக்கு வந்தோர் அவர்கள் கொண்டு வந்த தலையாணை கூடைகள் சுமைகளுடன் ஏறுவர்கள். பொருட்களை தட்டிவானின் மேல் பகுதியில் அல்லது பின்னுக்கு ஏற்றுவர்கள். பேண்கள் சிறுவர்கள் முதியவர்கள் மட்டுமே அநேகமாக வாகனத்துக்குள் பயணம் செய்வார்கள் இளைஞர்கள் வாகனத்தின் பின்புறம் பயணம் கதவு தட்டியில் ஏறி நின்று கூரையை பிடித்தவாறு காற்றோட்டத்தை அனுபவித்தவாறே பயணிப்பார்கள் பின் நெல்லியடியில் சென்று அரை மணி நேரம் காத்திருக்கும் அன்றைய காலப்பகுதியில் நேரக்கணிப்பு சிற்றுர்திகட்கு காணப்படவில்லை. எனவே தட்டிவான் சாரதிகள் பயணிகள் நிறையும் வரை காத்திருப்பார்கள். புpன் மெதுவான பயணிப்பில் கொடிகாமத்தை நோக்கி நகரத் தொடங்கும். புள்ளங்களில் ஏறி இறங்கும் Nபுhது குலுங்கி குலுங்கி ஒருவரையொருவர் பார்த்து சிரித்தவாறு பயணம் செல்லும். தேங்காய் வியாபாரிகளும் கச்சான் விற்கும் ஆச்சிகளும் அவர்களின் முணுகல்களும் முள்ளிவெளி அடைந்தவுடன் பலத்த காற்று வீச்சும் சிலவேளை பொருட்கள் காற்றின் பலத்தால் அடித்து செல்லும் சம்பவங்களும் தட்டிவான் குலுக்கல்களும் குழந்தைகளின் அழகை சத்தங்களும் என ஒரு வித சுவரஸ்யமான அனுபவத்தை கொண்டது தட்டிவான் பயணங்கள்.சுhரதிகளின் பணிவும் வெற்றிலை பரிமாற்றமும் தட்டிவான் உறுமலும் மறக்க முடியாத ஒன்றேயாகும்
சுpல வருடம் முன் வசதியான பேருந்து மினிபஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதும் இது பொதுமக்களால் கைவிடப்பட்டன. புதிய வாகனங்களுடன் போட்டி போட இயலாத தட்டிவான்களோ வீட்டுக்குள் முடங்கி காட்சி பொருட்களாக மாறத் தொடங்கின. போர்க்காலங்களில் மண்ணெண்ணெயில் கூட தாக்கு பிடித்து பயணித்தவை இத் தட்டிவான்கள்ஏத்தனையோ வசதிகள் கொண்ட குளிருட்டப்பட்ட சொகுசு பேருந்துகளில் பயணிப்போர் கூட இவ்வறான சுவரஸ்யமான உயிரோட்டமான பயணத்தை அனுபவித்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம் இன்றும் உல்லாசப் பயணிகள் சுற்றி பார்க்க பொழுது போக்கு சவாரிக்கு இவற்றை பயன்படுத்துவதன் முலம் அடுத்த தலைமுறைக்கு எமது பழைய அடையாளங்களை எடுத்துச் செல்லலாம்.
Post a Comment