Local News
News Update :
Hot News »
Bagikan kepada teman!

ஈழத்தின் விடுதலை வரலாறும் உயிர் தியாகங்களும்!

Penulis : anpusanthosh on Thursday, October 10, 2013 | 12:08 AM

Thursday, October 10, 2013

தாயகமக்களது நம்பிக்கை வழி தொடர்ந்து தம்மை நிரூபித்து வரும் நிலையில் இந்தியாவைமட்டுமல்ல சர்வதேசம் கூட எமது நியாயத்திற்கு நீதிவழங்க வேண்டும் என்பதானால் நாம் எம்மை அடையாளம் காண வேணடும் அந்த வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதற்கான தேவைகளை புலம் பெயர் சமூகம் உணர வேண்டும் அதற்கான தலமைத்துவத்தை தெரிவாக்க வேண்டும். அதுவே காலத்தின் அவசியம். அதனை நாம் ஏற்கத்தவறும் ஒவ்வொரு சந்தற்பமும்தான் முள்ளிவாய்கால் அவலத்திற்கான காரணம்.

  
கருணா மாறியமைக்காக கருணாவின் செயல்பாட்டை வழிநடத்தியவர்கள்தான் ஆபத்தானவர்கள் . கூட்டமைப்பை விமர்சிக்கும ஊடகம் தொட்டு கூட்டமைப்பு தோற்று ஒரு சந்தற்பத்தை எதிர்பார்க்கும் தமிழர்களால் தமது செயல்பாடுகளை முன்னிறுத்துவதானது ஈழத்தின் விடுதலைக்கானதல்ல. அதனால் காலம் தந்த போராட்டவழிகளை சமூகம் ஏற்பதற்கு இவர்கள் தடையாக செயல்படாதவரை இந்தியாவோ சர்வதேசமோ எமது இனத்தின் சுதந்திரத்தை மறுக்க முடியாது.

இலங்கை அரசாங்கத்திற்கு கட்டாயத்தின் பேயரால் குரல் கொடுப்பவர்களும் காலத்தின் விதியால் குரல்கொடுப்பவர்களாகவும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை வழி புலம் பெயர் தேசத்து அறிவாளிகளில் அரசாங்கம் வைத்திருக்கும் போது அதனை அடையாளம் காணப்படாமல் இருப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வளர்க்க சமூகத்தில் நம்பிக்கை அற்ற நிலை அதனால் வரும் தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பால் நா.க.த.அரசாங்கம் என்ன அதனை வளர்கப்படவேண்டிய தேவை என்ன எனும் அளவிற்குஅமைப்பக்களால் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் எதிர்காலத்தில் தடுகப்பட வேண்டும்.
காரணம் சர்வதேச அரசியல் நகர்வை தடைப்படுத்தி அமைப்புக்களை வளர்த்து எதிர்கால சமூகத்தில் ஒரு முள்ளிவாய்கால் அவலம் தடுகப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு சரியான அரசியல் தீர்வை கையளிப்பதற்கான வலுவான பக்கத்தை நா..க.தமிழீழ அரசாங்கம் மூலம் வளர்கப்படாதமைதான் கூட்டமைபிற்கான பின்னடைவாகவும் உள்ளது என்பதனை தமிழினம் புரிய மறுக்கும் வரை அன்றைய நிலையில் ஏற்பட்ட தவறுகள் இன்றைய நிலைவரைக்கும் காரணமாக அமைந்தது போல் இன்றைநிலை தொடராமல் பாரத தேசம் முடிவுகளை எடுக்கும் காலம் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் உண்ணாவிரதம் இருக்கும் தோழர் தியாகு அவர்களது கோரிக்கையை ஏற்று இராணுவத்தை வடமாணத்தை விட்டு வெளியேற்றி அலகின் அடிப்படையில் தமிழினத்தின் தனித்துவமான பாதுகாப்பிற்கான தீர்வை வழங்காமல் எப்படி இலங்கையில் நடைபெறும் சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா செல்ல முடியும் ? அதுவே இந்திய அரசாங்கத்திற்கான சவாலாகவும் சந்தற்பமாகவும் அமைந்துள்ளது. இந்தியாவினது சதியும சர்வதேசத்தின் சந்தற்பவாதமும் மட்டுமல்ல ஈழத்தமிழினத்தின் எதிர்பார்புகளாக ஒன்று பட்ட நிலையில் சர்வதேச அரசியல் நகர்வை இந்தியாவை பகைப்பதில் காட்ட வேண்டியதல்ல. எமது விடுதலைக்காக ஒரு தமிழராக கூட நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில்தான் கூட்டமைப்பினதும் நா.க..தமிழீழ அரசாங்கத்தினதும் தேவைகளை ஆராயப்பட முடியும்.

சிங்களத்தில் சிறை இருந்து வஞ்சகத்தில் மீது வளர்ந்து காலத்தை வென்ற காவிய நாயகர்களையும் அதனை மறந்தும் மறவாமலும் வாழும் எத்தனையோ போராளிகள் பலர் இன்றும் வாழும் போது எதிர்காலம் பற்றிய புரிதல்களுக்கு அமைய செயல்பட வேண்டியது கடமை. ஆனால் அதற்கான சந்தற்பங்கள் என்பது கூட அன்றும் போல் இன்றும் வீரவசனங்களின் விளைநிலமாக இன்னமும் மீடகப்படவில்லை. அதற்கான காலத்தை உருவாக்கி ஈழத்தின் விடுதலைப்பாதை வரலாற்றின் அடிப்படையில் மீண்டும் தன்னை நிரூபித்துள்ள நிலையில் அதற்காக போராட வேண்டியதும் ஈழத்தமிழினத்தின் கடமை மட்டுமல்ல உலகத்தமிழினத்தின் கடமை ஆகும் .

அந்த வகையில் ஒரு உண்மை விசுவாசமான போராளியாக மட்டும் இருந்தால் போதும் அவர்கள் சகாவரம் பெற்றவர்களாக வாழ்விலும் சாவிலும் சாதனை ஆளர்களாக ஈழத்தின் விடுதலைப்பாதை நகரும் என்பதே காலத்தின் நம்பிக்கை. அவர்களுக்காக எம்மினம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்..
இதனை சங்கர் அண்ணா தீலீபன் அவர்களை மட்டுமல்ல இத்தனை ஆயிரம் மாவீரர்களைப்பற்றி சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடிய பன்னிரு வேங்கைகள் மட்டுமல்ல மதிப்பிற்குரிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் கூட இருந்து எதனையும் சாதிக்க முடியும் என்பதனை விட அவர்கள் இறந்து பலருக்கு சந்தற்பம் அளித்துள்ளார்கள் ஈழவிடுதலை வரலாற்றினது உண்மைநிலையினை தெளிவுபடுத்த. (வாழ்வில் ஒருநாள் பயணம் அது )
இவர்கள் யாரது இழப்பும் 2007 ம்ஆண்டுவரை எமது விடுதலைக்காக சிந்திக்க வேண்டி எந்தச் சந்தற்பமும் உறுத்தவில்லை .எமது விடுதலைப்பாதையின் ஆழமும் அகலமும் அறிய சுயநலத்திற்காக புறப்படவில்லை . சுயசிந்தனைக்கு பலவிடயங்கள் ஆரம்பமானது 26.4.2007 ஈழத்தின் விடுதலைக்காக ஆராய இத்தனை சந்தற்பத்தையும் தந்துள்ளதென்றால் எதிர்காலம் பற்றி நாம் உண்மைக்கு மதிப்பக் கொடுக்கும் எதிர்காலத்தை தேடி நாம் என்றும் பயணிக்க வேண்டும் என்பதே உண்மை ஆகும்.


காரணம் எதிரியிடம் இருந்து உயிர் தப்புவதனைவிட துரோகி என்பதற்கான பாத்திரத்தில் இருந்து தவறுவதானது அதனைவிட ஆபத்தானது. ஒரு போராளியாக விடுதலையை நேசித்து போராடத்தை நேசித்து புலம் பெயர் தேசத்தில் போராடத்திற்கு அப்பால் பங்களிப்புக்களை தொடர்ந்து பங்களித்து சமாதானகாலத்தில் வந்தவர்களை வரவேற்றால் அதுகூட ஆபத்தானது.
. ஈழத்தின் விடுதலைப்போராடம் எதிரியால் வளர்கப்பட்டு துரோகியால் அடையாளம் காணப்பட்டு உண்மை மனிதர்காளால் ஈழத்தின் விடுதலை வரலாறு நிர்ணயிக்கப்படுவதனை யாராலும் தடுக்க முடியாது என்ற பக்குவத்தை எதிர்கால சமூகம் ஏற்றாக வேண்டும். என்பதே மாவீரர்களுக்கான கடமை மட்டுமல்ல இதனை அறிந்தும் அறியாமலும் உள்ள போராளிகளினது கடமையும். . வையகம் போற்றி வரலாறு வாழ்த்த வேண்டிய ஈழவிடுதலை வரலாற்றை எதிரியாலோ துரோகிகளாலோ அடையாளம் காண முடியாது என்பதனை இந்த வையகம் அடையாளம் கண்டுள்ளது.
அதனால் அத்தனை சந்தற்பங்களையும் தனதாக்கிகொண்டதே ஈழத்தின் விடுதலை வரலாறு என்பதனையும் அத்தனை உயிர் தியாகங்களும் தோற்க்க முடியாதவை என்பதனையும் ஈழத்தமிழினம் மட்டுமல்ல உலகத்தமிழினமும் உண்வழிகளில் உணர்ந்து கொண்டால் எதிரிக்காகவும் துரோகத்தனங்களுக்காகவும் பயப்படத் தேவையில்லை என்பதனை வரலாறு மட்டுமல்ல வன்னிமண்ணும் அடையாளப்படுத்திவருவதனை எதிர்கால சமூகம் புரிய வேண்டும்.


சாவு என்பது எதிர்பார்க்க முடியாத இலக்கு அல்ல அதனை தீர்மானித்து ஏற்றுக் கொண்டஎமது விடுதலை வரலாற்றினை நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய பலபக்கம் உள்ளது. அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதனைவிட தோல்விகளால் விடுதலைகான எதிர்காலத்தை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து நோர்வே வரை உலகத்தில் அனைவரலாலும் மட்டுமல்ல தமிழினத்தால் கூட தமிழீழ விடுதலை ஏமாற்றப்பட்ட தனை ஈழத்தமிழினமாகிய நாம் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும: மாவீரர்களும் போராளிகளாகவும் எமது விடுதலை வரலாற்றில் தோற்க்க முடியாத நகர்வை நாம் அடையாளம் காணப்பட வேண்டுமானால் நாம் எம்மில் இருந்து இறைவன் வரை அடையாளம் காணப்பட வேண்டும். அதுவே ஈழத்தின் விடுதலை வரலாறும் உயிர் தியாகங்களும்.
-சுவிஸ் தயா-
comments | | Read More...

தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!

Penulis : anpusanthosh on Wednesday, August 7, 2013 | 8:04 AM

Wednesday, August 7, 2013

ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் திருநாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆணையின் பிரகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதை இடம்பெற்றுள்ளது.
ஆம்! வெலிவேரிய சம்பவத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்று ஆகஸ்ட் முதலாம் திகதி.



கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதி மக்கள் அரசாங்கத்திடம் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது இவர்களது முதலாவது நடவடிக்கை அல்ல.

சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யுமாறு பிரதேச செயலர், அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தபோதுதான் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள்.

சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இராணுவம். இறுதியில் நடந்தது என்ன? மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, பலருக்குக் காயம், பலருக்கு உளரீதியான பாதிப்பு, வெறுப்பு என சோகம் நீள்கிறது.

சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

வெலிவேரிய, கல்மடுவ, ரத்துபஸ்வல, கஹபான ஆகிய பிரதேச மக்கள் நித்திரையின்றித் தவித்தார்கள். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இரவு 9 மணிக்குக் கூட ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கேட்டதாக குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரச சேவை. அது பொறுப்புள்ள அரச அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்படும்போது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் உரிமையோடு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவ்வாறு தமக்கான உரிமையை கேட்ட பொதுமக்கள் மீது இராணுவம் ஏவிவிடப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அதீத அக்கறை கூட அப்பாவி மக்கள் விடயத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

நீதி கேட்டுப் போராடிய மக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் பொலிஸாரை ஈடுபடுத்தாமல் இராணுவம் அங்கு வரவழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

இதற்கான உத்தரவை எங்கிருந்து? யார் பிறப்பித்தார்கள்?

சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உச்ச பதவியில் இருக்கக் கூடிய ஒருவராலேயே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் யார் உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை இதுவரை வெளியிடப்படாததன் பின்னணி என்ன?

இந்தச் சம்பவத்திலிருந்து அப்பகுதி பொலிஸார் பின்வாங்கியதன் காரணம் என்ன?

குற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்தி பயம் இன்றியும் மக்கள் நம்பிக்கையுடனும் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப் போக்கை கடைப்பிடித்தது?

சுமைகளைத் தாங்கி இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதிகார வர்க்கத்தின் எல்லை மீறிய செயற்பாடாகவே இதனைக் கருத முடியும். உரிமைக்கான போராட்டத்தை துப்பாக்கி முனையால் அடக்க முயல்வதுதான் ஆணையிட்டவர்களின் ஜனநாயகமா?

ஆக, ஆயுதம் தரித்தவர்கள் தமது இனத்தையே சுட்டுக்கொல்ல தயங்காதபோது நாட்டில் சிறுபான்மையினத்தவரின் நிலைமை என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது.

வெலிவேரிய மக்களின் வாழ்க்கை வரலாற்றில் கறுப்பு நாளாக ஆகஸ்ட் 1ஆம் திகதி மாறியமைக்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறுப்புக்களை தட்டிக்கழிக்காது பதில் தருவார் என்ற நம்பிக்கையில் வெலிவேரிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

வெறுமனே விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்டு அதனை பத்தோடு பதினொன்றாக இறாக்கையில் வைத்து அழகுபார்க்காது நல்லாட்சியின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்த வேண்டும்.

இல்லாவிடின் அரசாங்கம் மீதான தப்பபிப்பிராயம் மேலோங்குவதுடன் இது மேலும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

இறுதியாக கிடைத்த செய்திகளின் பிரகாரம் அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

மூன்று உயிர்களை பலிகொடுத்து குடிநீரை பெற்றுக்கொண்ட கசப்பான வரலாறுடையவர்களாக வெலிவேரிய மக்கள் எதிர்காலத்தில் கணிக்கப்படுவார்கள்.

எது எவ்வாறாயினும் தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீரைப் பரிசளித்த சம்பவம் இலங்கையில் தான் நடந்திருக்கிறது
comments | | Read More...

அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?

Penulis : anpusanthosh on Monday, August 5, 2013 | 9:33 AM

Monday, August 5, 2013

2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் "அபிவிருத்தியே" இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர். இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையை ஒரு "மனிதாபிமான" நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அரசாங்கம் மக்கள் வேண்டி நிற்பது அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளின் பூர்த்தியையே எனக்கூறியபடி "மீள்குடியேற்றம்" "அபிவிருத்தி" எனும் பதாகைகளுடன் திட்டங்களை ஆரம்பித்தது. இத்திட்டங்கள் வெளிநாட்டு நன்கொடை உதவியுடனும் கடனாகப்பெற்ற பெருமளவு நிதியுடனும் அமுலாக்கப்பட்டன, படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட பெருமளவு நிதிவளங்களில் பெரும்பகுதியினை பெளதீக உட்கட்டுமானத் திட்டங்களே உறிஞ்சுகின்றன. 


ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா. 

ஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு "அபிவிருத்தியை" முன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே. 

இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும் "அபிவிருத்தி" என்பதன் உள்ளடக்கம் தான் என்ன? வடக்கு கிழக்கில் இடம் பெறும் "அபிவிருத்தி" மக்கள் விரோதப் போக்குகளுடன் பின்னிப்பிணைந்திருப்பதால் அது பெரும்பாலானோரின் நீடித்த மனித மேம்பாட்டிற்கு உதவவல்லதா என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் சொல்வது இலங்கையின் மற்றய பகுதிகளில் பெரும்பாலானமக்களின் நலன்சார்ந்த அபிவிருத்தி ஏற்படுகிறது என்பதாகாது. வடக்கு கிழக்கில் அமுலில் இருக்கும் அபிவிருத்திக் கொள்கையை முழு நாட்டிலிருந்தும் முற்றிலும் தனிமைப்பட்ட ஒன்றெனக் கொள்ளமுடியாது. அதேவேளை பலகாரணங்களால் வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்குச் சில குறிப்பான சவால்களும் தன்மைகளும் உண்டு. இவை முழு நாட்டையும் பாதிக்கவல்லன என்பதும் உண்மை. 

1977 லிருந்து இலங்கையில் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை நடைமுறையிலிருக்கிறது. 1970 களிலிருந்து பல நாடுகள் மீது திணிக்கப்பட்ட இந்த கொள்கை மக்கள் நலன் சார்ந்ததல்ல எனப் பல ஆய்வுகள் தெளிவாக காட்டியுள்ளன. அதேவேளை இலங்கையில் இந்தக் கொள்கையின் நடைமுறையும் நாட்டின் பொருளாதாரமும் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஒரு குடும்பத்தின் செல்வாக்குக்கும் ஆதிக்கத்துக்கும் உள்ளாகியிருப்பதும் உலகறிந்ததே. ஆளும் கூட்டினர் நவதாராளவாதவிதிகளை தமது நலன்களுக்கேற்ப மாற்றிக் கொள்வதையும் மீறுவதையும் காண்கிறோம். இதன் விளைவான "அபிவிருத்திப் போக்கு" தீர்வு காணப்படாத தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல், பேரினத்துவ மேலாதிக்கம், அதிகாரவாதமயமாக்கல், பெருமளவிலான நாடளாவிய மனிதஉரிமை மீறல்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இந்தச் சிக்கலான’பின்னிப்பிணைப்புடன் உள்நாட்டுப் போரினதும் உலகமயமாக்கலினதும் விளைவான காசாதாரப் பொருளாதாரத்தின் (remittance economy) நல்ல தீய தாக்கங்களும் இணைகின்றன. 

அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை நிராகரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த அபிவிருத்தியின் அரசியல் பொருளாதாரத்தை ஆழப்பார்த்தல் அவசியம். இது வடக்குக் கிழக்கில் சில குறிப்பான அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் அதேவேளை முழு இலங்கையையும் பாதிக்கும் ஒன்றாகும். பொருளாதாரக் கொள்கையின் நடைமுறை, ஒரு குடும்பத்தை மையமாக கொண்ட அதிகாரக்குழுவின் போக்கு, எதேச்சாதிகார இராணுவ மயமாக்கல், பேரினவாதக் கருத்தியலின் பயன்பாடு ஆகியன எப்படி அடக்குமுறைக்கு உதவும் வகையில் இணைக்கப்பட்டு "அபிவிருத்தி" "தேசிய இறைமை" எனும் போர்வைகளால் நியாயப்படுத்தப் படுகின்றன என்பதைப் பார்த்தல் அவசியம். இவற்றைப் பார்ப்பதற்கு முன் அபிவிருத்திக்கும் மனித மேம்பாட்டிற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஒரு குறிப்பு பயன்தரும். 


மனிதமேம்பாடு பற்றிமனிதமேம்பாடு எனும் போது ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் வாழும் மனிதரின் ஆற்றல்களின் விருத்தியையே குறிக்கும். பொதுவாக மனிதரின் உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, உழைப்பாற்றல், பாதுகாப்பு மற்றும் ஒருவர் பெறுமதிமிக்கதெனக் கருதும் வாழ்முறையைத் தேடும் சுதந்திரம் போன்றவை மனித மேம்பாட்டின் வரைவிலக்கணத்தின் அம்சங்களாக கருதப்படுகின்றன. வாழ்முறையைத் தேடும் சுதந்திரம் என்பது சிந்தனை, பேச்சு, எழுத்து சுதந்திரங்களையும் உள்ளடக்குகிறது. இந்த வகையில் மனித மேம்பாட்டை நோக்குமிடத்து அது மனித நன்னிலையின் தன்மைகளைக் குறிக்கிறது. அபிவிருத்தியை மனித சுதந்திரங்களின் விரிவடைதலுடன் இணைக்கும் சிந்தனைப்போக்கு ஒன்று உண்டு. இன்றைய காலத்தில் இந்த அணுகுமுறையைப் பிரபல்யப்படுத்தியவர் அமர்த்தியா சென் அவர்கள் ஆகும். 

அபிவிருத்தியை மனித ஆற்றலுடைமைகளின் (capabilities) வளர்ச்சியின் படிமுறைப் போக்காக பார்க்கலாம் என சென் கூறுகிறார். ஆற்றலுடமை மனிதரின் இருப்புக்களையும், (beings)செயற்பாடுகளையும் (doings)உள்ளடக்குகிறது. இது ஒருவர் பசி, பிணி, எழுத்தறியாமை போன்றவற்றிலிருந்து விடுபடும் அடிப்படை இருப்புகளிலிருந்து அவர் தனக்குப் பெறுமதி வாய்ந்ததெனப் பகுத்தறிவு பூர்வமாகக் கருதும் இருப்புக்கள் செயற்பாடுகளை அனுபவிக்கும் ஆற்றல்களைச் சுதந்திரங்களைக் குறிக்கும், நீண்டகாலமாக இந்தக் கோட்பாட்டை பல ஆய்வுகளுக்கூடாக விளக்கிய சென் தனது முழுமையான கருத்துக்களை 1999ல் Development As Freedom எனும் நூலில் தருகிறார். சென்னுடைய கருத்து 18ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவொளிக்காலத்தில் (The Enlightenment period) வெளிவந்த மனித விடுதலை பற்றிய சிந்தனையினால் ஆகர்ஷிக்கப்பட்டது. அவரது நிலைப்பாடு தாராளவாத தத்துவத்தில் வேரூன்றியுள்ளது. குறிப்பாக அடம் ஸ்மித்தின் தாராளவாதத்தில் என்று அவரே கூறியுள்ளார். இன்று அபிவிருத்தி கற்கைகள் துறையிலும் UNDP இன் மனித அபிவிருத்தி (Human development) அறிக்கைகளிலும் சென்னுடைய கோட்பாட்டின் செல்வாக்கைக் காணலாம். முதலாளித்துவ அமைப்புக்குள் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப அபிவிருத்திப் போக்குகளை மதிப்பிடவும் விமர்சிக்கவும் சென்னுடைய ஆற்றலுடைமைக் கோட்பாட்டைப் பயன்படுத்தலாம். அதேவேளை அவருடைய தாராளவாத நிலைப்பாடும் உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களைப் பற்றி அவர் கணக்கிலெடுக்கத் தவறியதும் விமர்சிக்கப்பட வேண்டும். அதே போன்று முதலாளித்துவம் பற்றிய அவரது விளக்கங்களும் சர்ச்சைக்குரியவை. இந்த அம்சங்கள் பற்றி நான் 2001 ல் ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளேன். (Shanmugaratnam 2001). அபிவிருத்திச் சிந்தனைகள் பற்றி பிறிதொரு விரிவான கட்டுரையை எழுத வேண்டிய தேவை இருப்பதாகவும் கருதுகிறேன். 

இங்கு அழுத்திக் கூறவேண்டிய விடயம் என்னவெனில் மனிதமேம்பாட்டையோ நன்னிலையோ பிரதானமாக நோக்கமாக கொண்டு இயங்கும் சமூக அமைப்பில் நாம் வாழவில்லை. முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் மனித உழைப்பாற்றலின் வளர்ச்சி இன்றியமையாதது. இந்த அமைப்பில் மனித மேம்பாடு என்பது மூலதனத்தின் பொருளாதார, சமூக, அரசியல் தேவைகளுடன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளது. ஆகவே மனிதமேம்பாட்டை நாம் வாழும் சமூக அமைப்பின் தன்மைகளிலிருந்து பிரித்துப் புரிந்து கொள்ளவோ விளக்கவோ முடியாது. முதலாளித்துவதற்கு அடிப்படையான உலகளாவிய தன்மைகள் இருக்கும் அதேவேளை அது நிறுவன ரீதியில் பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு இராணுவ சர்வாதிகாரம் மற்றும் பாசிசம் போன்ற அடக்குமுறை மிகுந்த ஆட்சியமைப்புகளிலிருந்து பூர்சுவா சுதந்திரங்கள் மனித உரிமைகளைக் கொண்ட தாராளவாத மற்றும் சமூக ஜனநாயக ஆட்சி அமைப்புக்கள் வரை முதலாளித்துவத்தின் அரசியல் மாதிரிகளை நடைமுறையில் காணலாம். இத்தகைய அமைப்பு ரீதியான வேறுபாடுகளுக்களுக்கும் மனிதமேம்பாட்டின் விருத்தியின் மட்டங்களுக்குமிடையே நெருக்கமான உறவு இருப்பதைக் காணலாம். உதாரணமாக உணவு, உறைவிடம், உடை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கும் ஒரு சமூகத்தில் மற்றய அடிப்படைச் சுதந்திரங்கள் மறுக்கப்படலாம். இந்தத் தடைகள் மனித மேம்பாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். பொதுவாக ஒரு நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரங்கள் சமூகப்பாதுகாப்பு போன்றவை மக்களின் போராட்டங்களின் விளைவுகள் என்பதை மறந்துவிடலாகாது. இப்போராட்டங்கள் வர்க்க ரீதியாகவும் பரந்த வெகுஜன ரீதியாகவும் இடம் பெறுகின்றன. இவற்றில் தொழிலாளவர்க்க மற்றும் பெண்ணுரிமை, சூழல்பாதுகாப்புஇயக்கங்கள் முக்கிய பங்குகளை வகித்துள்ளதைக் காணலாம். மறுபுறம் ஒரு முதலாளித்துவ அமைப்பின் அரசியல்ரீதியான சமூகரீதியான நியாயப்பாட்டிற்கு ஜனநாயக உரிமைகளும் சமூகப்பாதுகாப்பும் அவசியமாகின்றன. அடிப்படை உரிமைகளை மறுக்கும் அரசு அடக்குமுறைக் கருவிகளிலேயே தங்கியிருக்கும். அத்தகைய அரசில் மனித மேம்பாட்டின் போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. 

முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அதன் வரையறைக்குள்ளே சாத்தியமான ஜனநாயக சுதந்திரங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய சுதந்திரங்கள் பல சமூக மட்டங்களில் உள்ள மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தவும் அவற்றிற்காகப் போராடவும் உதவுகின்றன. இத்தகைய ஒரு நிலை வரும்போது சமூகபொருளாதார சந்தர்ப்பங்கள், அரசியல் அதிகாரம் போன்றவற்றின் பங்கீடு ஒரு முக்கிய கேள்வியாகிறது. இது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு பெரும் பிரச்சனையாகிறது. ஆகக்குறைந்த ஊதியம், சமூகப்பாதுகாப்பு, பால்சமத்துவம், சூழலின்பாதுகாப்பு, இன, மத, சாதிரீதியான பாகுபாட்டினை ஒழித்தல் போன்ற அடிப்படை விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை விரும்பாத ஆட்சியாளர் ஜனநாயக உரிமைகளையே நசுக்க முடிவெடுப்பார்கள். இது அடக்குமுறை ஆட்சிக்கு இட்டுச்செல்லுமா இல்லையா என்பது அரசியல் சக்திகளின் ஒப்பீட்டு ரீதியான பலத்தினைப் பொறுத்தது. இன்று இலங்கையில் அடக்குமுறை சக்திகளின் கைகளே ஒங்கியிருப்பதைக் காண்கிறோம். 

இன்றைய நவதாராளவாத யுகத்தில் ஒவ்வொருவரும் சுயாதீனமான தனிநபராக தன்னியல்பான போட்டிச்சந்தையில் பங்குபற்றுவதன் மூலம் தனது சுயநலன்களைப் பூர்த்தி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித மேம்பாட்டிற்கு இதுவே வழி என்பதே. அந்த அபிவிருத்தி மாதிரியின் எடுகோளாகிறது. இது ஒருவித சந்தை அடிப்படைவாதம் என்றால் மிகையாகாது. தொழிற்சங்க சுதந்திரத்தையும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கைகளையும் நசுக்குவதற்கு இந்தவாதம் பயன்படுகிறது. நடைமுறையில் இது தொழிலாளவர்க்க எதிர்ப்பு, மக்கள்எதிர்ப்பு ஆகியவை மீதான அடக்குமுறைக்கு உதவுகிறது. தனிமனித சுதந்திரம் என்பது சந்தையில் பங்குபற்றும் சுதந்திரமாக மட்டுப்படுத்தப்படுகிறது. இது மனிதமேம்பாட்டின் விருத்திக்குப் பொருளாதார ரீதியான அரசியல் ரீதியான தடைகளைப் போடுகிறது. 

நவதாராளவாதக் கொள்கையின் அமுலாக்கம் நாட்டுக்கு நாடு காலத்துக்கு காலம் வேறுபடுகிறது. எந்த ஒரு அரசாங்கமும் இத்தகைய ஒரு கொள்கையைத் தனது அரசியல் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே செயற்படுத்தும். முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு சமூகரீதியிலும் புவியியல்ரீதியிலும் முரண்பாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஊடாகவே நகர்கிறது, இதன் விளைவாக வரும் எதிர்பார்ப்புக்கள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கம் எப்படிக் கையாள்கிறது என்பதும் முக்கியமான கேள்வி. இது ஒரு அரசியல் கேள்வியாகும். குறிப்பிட்ட பிரதேசத்தவரின் அல்லது குறிப்பிட்ட இன அல்லது மதக்குழுவினரின் ஆதரவைப் பெறும் நோக்கில் அரசின் நிதிவளங்கள் ஒதுக்கீடு செய்யப்படலாம். குறிப்பிட்ட பிரதேசங்களுக்குத் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசாங்கம் உட்கட்டுமான முதலீடுகளைச் செய்வதுடன் வேறு சலுகைகளையும் வழங்கலாம். இப்படியாக நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை வலியுறுத்தும் பண்டமயமாக்கலும் தனியுடைமைமயமாக்கலும் அரசியல் ரீதியில் கையாளப்படலாம். ஆகவே தூய நவதாராளக் கொள்கை என்று ஒன்று நடைமுறையில் இல்லை. அரசியலை ஒதுக்கிப் பொருளாதாரத்தைப் பார்ப்பதில் அர்த்தமில்லை. 

இலங்கையில் நடப்பதென்ன? 
முழுமையாக தொகுத்து நோக்குமிடத்து இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானதும் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் உள்ளது. நவதாராள கொள்கையை ஏற்றுள்ள அரசாங்கம் அதேவேளை பொருளாதாரத்தில் பெருமளவிலான தலையீடுகளினதும் தொடர்ச்சியாக மேற்கொள்வதோடு நிறுவனமயமாக்கப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாதமும், அரசியல், பொதுநிர்வாகம், கல்விசார் நிறுவனங்கள் அனைத்தின் மீதான இராணுவமயமாக்கலும் ஆட்சியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கூண்டோடு கைப்பற்றுவதில் முழுநேரமும் கண்ணாயிருக்கும். முதலாவது குடும்பம், இதற்கு அடிபணிந்து செயல்படும் புல்லுருவி அரசியல்வாதிகள் உயர்அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறையினர், சட்டமும் ஒழுங்கும் நிலைகுலைந்த நிலையில் நசுக்கப்படும் சிவில்சமூகம் இவற்றுடன் சகல மட்டங்களிலும் ஊழல், இவை எல்லாம் ஒன்றுகூடும் இடமாகி விட்டது இலங்கைத்தீவு. முரண்பாடுகள் மிக்க இந்த நிலைமை வெளிப்படுத்தும் ஒழுங்கற்ற சமூகச்சூழலுக்குப் பின்னே ஒரு தர்க்க ரீதியான போக்கு உண்டு. அதைப் புரிந்து கொள்ள அரசியல் அதிகாரம் எப்படி இலங்கை அரச அமைப்பில் பண்புரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தப்போக்கு இலங்கையின் முதலாளித்துவ அபிவிருத்திப் போக்கை எப்படி வழி நடத்த முயல்கிறது என்பதையும் அவற்றின் சமூகரீதியான விளைவுகளையும் பார்த்தல் அவசியம். 

இலங்கை அரசின் நிர்மாணம் ஒரு தொடர்ச்சியான போக்கு. காலனித்துவம் கையளித்த அரசினை சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த அரசாங்கங்கள் யாப்புக்களை மாற்றுவதற் கூடாகவும் தனிப்பட்ட சட்டங்களுக்கூடாகவும் மாற்றியமைத்து வந்தன. உள்நாட்டில் பெருந்தேசிய இனவாதத்தின் எழுச்சி வர்க்க முரண்பாடுகளை மழுங்கடித்த அதேவேளை முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கின் மீதும் ஆதிக்கம் செலுத்தியது. இதனைப் பின்நோக்கிப் பார்க்கும் போது பேரினவாதத்தின் குட்டிப்பூர்சுவா கருத்தியலின் இனத்துவ மேல் நிர்ணய அதிகாரம் மேலும் தெளிவாகிறது. குறிப்பாக 1956 க்குப் பின்னர் பொருளாதாரத்தின் அரசுடமையாக்கலை இந்தக் கருத்தியலே வழி நடத்தியது. அரச கூட்டுத்தாபனங்களின் வளர்ச்சி ஒரு அபிவிருத்தி அரசினால் வழிநடத்தப் படவில்லை. மறுபுறம் 1956ற்கு பின்னரான காலகட்டம் இடதுசாரி இயக்கத்தின் வீழ்ச்சியையும் தொழிலாள வர்க்கம் இனத்துவ அரசியலால் உள்வாங்கப் படுவதையும் கண்டது. 1977 இல் UNP அரசாங்கம் ஏற்றுக் கொண்ட நவதாராள திறந்த பொருளாதாரக் கொள்கை அரசில் நிறுவனரீதியான சில மாற்றங்களுக்கு வழிவகுத்தது. சுதந்திரவர்த்தகம், சுயபோட்டிச்சந்தை, தனியுடைமையாக்கல் போன்ற அடிப்படை அம்சங்களைக் கொண்ட இந்தக் கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் மனித மேம்பாட்டைப் பொறுத்தவரை 1977க்கு முன்னர் இருந்த சமூகநலஉதவிகள், மானியங்கள் படிப்படியாக அகற்றப்பட்டன. இன்றுவரை இந்தப் போக்கில் மாற்றமில்லை. அதேபோன்று தொழிலாளர் உரிமைமறுப்புப்போக்கு முன்பை விட மோசமாகத் தொடர்கிறது. 1977க்குப் பின்னர் அரசின் சிங்கள பெளத்தமயமாக்கல் மேலும் ஆழமாகத் தொடர்ந்தது. 1977-1983 காலகட்டத்தில் தமிழ்மக்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்தன. தேசியஇனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் துரிதமடைந்தது.ஒரு இனத்துவ மேலாதிக்க அரசான(Ethnocratic State) - இலங்கை அரசு இராணுவ ரீதியில் மேலும் பலமடைந்தது. இது பற்றி முன்னைய கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன் (உதாரணமாக சமகாலம் ஒக்டோபர் 1-15/2012 ல் "நிலமும் தேசியபிரச்சனையும்" எனும் தலைப்பிலான கட்டுரை). 

நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கும் பேரினவாத அரசியலுக்குமிடையே முரண்பாடு உண்டு. முன்னையது மூலதனத்தின் வளர்ச்சியைப் மையமாகக் கொண்டது. அதைப்பொறுத்தவரை மூலதனத்தின் இலாபத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் அரசியல் அர்த்தமற்றது ஆபத்தானது. ஆனால் இலங்கையின் யதார்த்தம் இதனுடன் முரண்படுகிறது. 1983 கலவரத்தை ஆளும் கட்சியினரே நடத்தி வைத்தனர். அதில் தமிழருக்குச் சொந்தமான மூலதனம் பெருமளவில் அழிக்கப்பட்டது. தமது ஆட்சிக்காலத்தில் குவிந்த மூலதனத்தின் ஒரு கணிசமான பகுதியை அழிப்பதற்கு அதே ஆட்சியாளர்கள் உதவியாக இருந்தார்கள். இது இனத்துவ மேலாதிக்க அரசியலுக்கும் மூலதனத்தின் குவியல் சார்ந்த பொருளியலுக்குமிடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடு. இத்தகைய உள்நாட்டுச்சூழலில் மூலதனத்திற்கும் இனத்துவத்திற்குமிடையிலான உறவையும் கணக்கிலெடுத்தல் வேண்டும். 

போருக்குப் பின்னர் ஆட்சியாளர் அரசில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களை அவதானிக்கும் போது பல முக்கிய போக்குகளைக் காணலாம். ஒருபுறம் இவை அரசின் இனத்துவ மேலாதிக்கத் தன்மையை மேலும் ஆழமாக்கி சிங்கள பெளத்தத்தைச் சாராத இனங்களைக் குறிப்பாக தமிழ்பேசும் மக்களை மேலும் உரிமை மறுக்கப்பட்ட குடிமக்களாக்குகின்றன. மறுபுறம் இந்தப் போக்குகள் நாட்டின் சகல மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன. முதன்முதலாக "தேசியஇறைமை" எனும் பெயரால் அரசின் பாதுகாப்பு மேலும் இராணுவரீதியில் பலப்படுத்தப் படுகிறது. இந்த பாதுகாப்புமயமாக்கல் (Securitisation) குடிமக்களின் மனித பாதுகாப்பை அரசின் பாதுகாப்புக்கு கீழ்படுத்தியுள்ளது. இதன் உச்சக்கட்டத்தை வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் மீது விதிக்கப்படும் இராணுவ ரீதியான அடக்குமுறையில் காண்கிறோம். 

அடுத்து, போருக்குப் பின்னான புனரமைப்புத்திட்டங்கள், நகர் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை இராணுவ மயமாக்கப்படுவது மட்டுமின்றி வடக்குக் கிழக்கில் இராணுவத்தினர் விவசாயம், வாணிபம், கடற்றொழில், உல்லாசத்துறை போன்ற துறைகளிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒழுக்கமுறைப்பயிற்சி, தலைமைத்துவப்பயிற்சி எனும் போர்வையில் கல்வித்துறையினுள்; இராணுவமயமாக்கல் ஊடுருவியுள்ளது. இவையெல்லாம் மனித சுதந்திரங்களையும் வாழ்வாதாரங்களையும் பலவிதமாகப் பாதித்து மனித மேம்பாட்டிற்கு தடைகளைப் போடுகின்றன. இவை இராணுவ மயமாக்கலின் சில முக்கியமான மக்கள் விரோத விளைவுகள். 

அரசின் பாதுகாப்புமயமாக்கலை ஆட்சியாளர் நியாயப்படுத்தப் பயன்படுத்தும் "தேசியஇறைமை" "பிரிவினைவாத ஆபத்து" போன்ற கருத்தியல் ரீதியான திரைகளுக்குப் பின்னால் உள்ள யதார்த்தங்களைப் பார்ப்பது அவசியம். அரசின் பாதுகாப்பு மயமாக்கல் (தேசியபாதுகாப்பு அரசு) என்பது சிவில்சமூகத்தை அரசின் பலாத்கார கருவிகளால் கட்டுப்படுத்துவது அல்லது நசுக்குவதாகும். இந்தக் கடும்போக்கு வடக்கு கிழக்கில் மட்டுமின்றி சிங்களமக்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கிலும் பலப்பட்டுவருதைக் காணலாம். அங்கே தொழிலாளர்களின் மற்றும் நடுத்தர வர்க்க ஊழிய உழைப்பாளர்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கான தொழிற்சங்க ரீதியான கூட்டுச்செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஆட்சியாளர் அரசின் பலாத்காரக் கருவிகளை மட்டுமல்ல அரசியல்வாதிகளின் பாதாளஉலக(underworld) பயங்கரவாதத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவும் நீண்ட காலமாக ஸ்தம்பித்து இருக்கும் மெய்ஊதியமும் (real wage)சகல இனங்களையும் சார்ந்த உழைக்கும் வர்க்கங்களின் மனித நன்னிலையை மோசமாகப் பாதித்திருக்கும் நிலையில் தொழிற்சங்க உரிமைகள் நசுக்கப்படுகின்றன. 

பெரும்பான்மை இனத்தைப் பொறுத்தவரை சிவில்சமூகம் அரச பலாத்காரத்தின் அடக்குமுறைக்குப் பலியாக்கப்படும் நிலை ஒரு முக்கிய செய்தியைச் சொல்லுகிறது. அதாவது பெரும்பான்மை இன மக்களை சிங்களபெளத்தபேரினவாத கருத்தியலின் மேலாட்சியால் (Hegemony)மட்டும் வழமைபோல் கட்டியாள்வது கடினமாகிவிட்டது. சிவில்சமூகத்தில் கருத்தியலின் மேலாட்சி எனும் மிருதுவான அதிகாரசக்தியினால் (soft power) சிங்கள மக்களின் பெரும்பான்மையோரின் சம்மதத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் இன்றைய அரசாங்கத்தினால் பெறுவது சுலபமல்ல. இதனால் அரசின் வன்மையான அதிகாரத்தில் (hard power) ஆட்சியாளர் கூடுதலாகத் தங்கி நிற்கும் நிலையைக் காண்கிறோம். அதேவேளை சிங்கள மக்கள் மீதான கருத்தியல் ரீதியான மேலாட்சியினை தக்கவைக்க ஜாதிக ஹெல உறுமய(JHU), பொதுபலசேனா(BBS), வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி (NFF) போன்ற அமைப்புக்களையும் தமக்கு ஆதரவான ஊடகங்களையும் ஆட்சியாளர் பயன்படுத்துகின்றனர். 

நீண்ட காலமாக ஆளும் கட்சியினர் பெரும்பான்மை இனத்தின் பரந்த சமூகப்பிரிவினரான குட்டிப்பூர்சுவாப் பின்னணியைக் கொண்ட நடுத்தர, கீழ்நடுத்தர மட்டங்களின் அரசியல் ஆதரவையும் விசுவாசத்தையும் தக்கவைப்பதற்கு அரச நிறுவனங்களுக்கூடாகவும் அரச வளங்களைப் பயன்படுத்தியும் சலுகைகளை அவர்களுக்கு வழங்கி வந்தனர். குறிப்பாக அரச நிறுவனங்களிலும் அரசினால் அமுல் படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலும் வேலைவாய்ப்புக்கள் குடியேற்றத்திட்டங்களில் நிலப்பங்கீடுகள் போன்றவை. அரசியல் மயப்படுத்தப்பட்ட இத்தகைய சலுகைகள் தமிழ்பேசும் சமூகங்களின் சில பகுதிகளுக்கும் கிடைத்தது உண்மையெனினும் அவற்றின் கொள்கை ரீதியான நடைமுறை பெருந்தேசியவாத அரசநிர்மாணத்துக்கு உதவுவதையே நோக்காக கொண்டிருந்தது. அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பையும் பங்குபற்றலையும் பெறுவதற்கு இந்த சலுகைகளை ஐக்கியதேசியகட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினதும், தலைமைகள் மாறி மாறி பயன்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. 

1977 ல் ஐக்கிய தேசியகட்சியின் ஆட்சியில் நவதாராளவாதக் கொள்கை அமுலுக்கு வந்த போதும் பல அரச கூட்டுத்தாபனங்கள் பாரியளவிலான நட்டம் நிதியிழப்பு ஆகியவற்றுக்கு தொடர்ச்சியாக உள்ளாகியும் இன்றுவரை தனியுடைமையாக்கப்படாதிருப்பதை இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும். 


02.

இலங்கை அரசு ஒரு அபிவிருத்தி அரசா? தோற்றங்களும் உள்ளடக்கங்களும் 

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இலங்கைஅரசு ஒரு அபிவிருத்திசார் அரசாக (developmental state) மாறி வருவதாகச் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கருத்தை நான் சில கருத்தரங்களிலும் கேட்டுள்ளேன். ஆட்சியாளரும் இலங்கை "ஆசியாவின் அதிசயம்" (Miracle of Asia) எனும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் பாரிய உட்கட்டுமான திட்டங்களையும் மத்தியவங்கி வெளியிடும் பொருளாதார வளர்ச்சி வீதப்புள்ளி விபரங்களையும் பலர் காட்டுகிறார்கள். உட்கட்டுமானத்திட்டங்கள் பலவற்றை நாம் நேரடியாகப் பார்க்கிறோம். புதிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறோம். உண்மைதான். மத்தியவங்கியின் புள்ளிவிபரங்கள் கேள்விக்கிடமானவை என விபரம் அறிந்தவர்கள் கருதும்போதும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதென்பதும் உண்மைதான். முன்பை விட ராஜபக்ச ஆட்சியில் அரசின் பொருளாதார ரீதியிலான ஈடுபாடுகள் அதிகம் என்பதும் உண்மைதான். இவற்றை மட்டும் வைத்து இலங்கைஅரசு ஒரு அபிவிருத்திஅரசு என்ற முடிவுக்கு வருவது அவசர முடிவென்பதே எனது கருத்து. 

சமீபத்திய தசாப்தங்களில் "அபிவிருத்திஅரசு" எனும் கோட்பாடு 1960 களிலிருந்து துரித முதலாளித்துவ அபிவிருத்தியைப் பெற்ற கிழக்காசிய நாடுகளின் (குறிப்பாக தென்கொரியா, தைவான், ஹொங்கொங், சிங்கப்பூர்) அரசு பற்றியதாகும். ஜப்பானின் அபிவிருத்தி வரலாற்றின் மாதிரியைத் தொடர்ந்து இந்த கிழக்காசிய நாடுகளின் நவீனமயமாக்கலில் அரசு ஒரு பாரிய தலைமைத்துவப் பங்கினை வகித்தது. கிழக்காசிய "அபிவிருத்திஅரசு" பற்றி பெருந்தொகையான ஆழ்ந்த ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிரசுரிக்கப்பட்ட பல பிரபல்யமான ஆய்வுகளின்( உதாரணமாக Alice Amsden, Robert Wade, Manuell Castells, Shinohara, Appelbaum and Henderson போன்றவர்களின் ஆய்வுகளின்) உதவியுடன் கிழக்காசிய அபிவிருத்தி அரசு பற்றியும் மற்றய நாடுகளுக்கு அந்த மாதிரியின் பயன்பாடு பற்றியும் நான் எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை 1995ல் ஒரு சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. அந்தக் கட்டுரையின் உதவியுடன் கிழக்காசிய அபிவிருத்தி அரசின் அடிப்படைத் தன்மைகளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். 

நாட்டின் முதலாளித்துவ மாற்றம் பற்றிய திடமான பார்வையையும் ஆலைத்தொழில் மூலதனத்தின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலைப்பாட்டையும் கொண்ட ஒரு ஆளும் கூட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். 

நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளைக் குறிப்பிட்ட தனியாரின் நலன் சார்ந்த தலையீடுகளின்றி துறைசார் நிபுணர்களின் உதவியுடன் வகுக்கும் சுதந்திரத்தைக் கொண்ட அரசு. 

உள்நாட்டு வெளிநாட்டு மூலதனத்தின் போக்குகளை நெறிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அரசு. ஏற்றுமதியை வளர்க்கவும் நாட்டிற்குள் உற்பத்தியைப் பெருக்கி மூலதனக்குவியலை அதிகரிக்கவும் உதவும் வகையில் சந்தையை நெறிப்படுத்தி ஆளும் அறிவுத்திறனையும் நிறுவனங்களையும் கொண்ட அரசு. 

உற்பத்தித்திறனைத் தொடர்ச்சியாக விருத்தி செய்யும் நோக்கில் தொழில் நுட்பத்தினை உள்வாங்குதல் மற்றும் மனிதமூலதனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு. 

தொழிலாளவர்க்கத்தின் கூட்டுச் செயற்பாடுகளையும் ஐனநாயக சுதந்திரங்களுக்கான அமைப்புக்களையும் நசுக்கும் அதேவேளை தொழிலாளரின் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்கேற்ப மெய்ஊதியத்தைச் சகல துறைகளிலும் உ.யர்த்தும் கொள்கையை அமுலாக்கவல்ல அரசு. 

நீண்டகாலகடன் மற்றும் விசேட மானியங்கள் போன்றவற்றை வழங்கி உள்நாட்டு முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்திற்கு உதவும் வகையிலான அரச பொருளாதார முதலீடுகள். உதாரணத்திற்கு நீண்டகால போக்கில் அதிக இலாபம் தரக்கூடிய பாரிய ஆலைத்தொழில் உற்பத்தியில் அரசு முதலீடு செய்து அது இலாபம் தரத்தொடங்கும் போது தனியுடைமையாளருக்கு விற்றல். 

பொருளாதாரத்திட்டமிடல் ஜப்பானிலிருந்து தென்கொரியா தைவான் வரை கிழக்காசிய அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. முதலாளித்துவத்தின் விருத்திக்குத் திட்டமிடல் அவசியமில்லை எனும் சந்தை அடிப்படைவாதக் கருத்தினை மறுதலிக்கும் நடைமுறையாக இது இருக்கிறது. இந்தக் கிழக்காசிய நாடுகளில் நீண்ட காலமாக ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன அல்லது கட்டுப்படுத்தப்பட்டன. அதேவேளை உற்பத்தி சக்திகள் தொடர்ச்சியாக முன்னேறின. தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அறிவாளர்கள் ஜனநாயகஉரிமைகள் கோரிப் போராட்டங்கள் நடத்தினர். இந்தப் போக்குகள் தென்கொரியாவில் மிகவும் பலமடைந்தன. இன்று அங்கே காணப்படும் ஜனநாயக உரிமைகள் இத்தகைய போராட்டங்களினதும் ஆளும் வர்க்கம் எதிர்கொண்ட அரசியல் நிர்ப்பந்தங்களினதும் விளைவுகளாகும். சீனாவின் துரிதமான முதலாளித்துவப் பயணத்தை கிழக்காசிய மரபிலே புரிந்து கொள்ளல் முக்கியம். சீனாவின் அரசு ஒரு அபிவிருத்திஅரசு எனலாம் ஆனால் சீனாவின் நெருங்கிய நட்பை பெற்றிருப்பதாலோ அல்லது தொடர்ச்சியாகச் சீனாவிடம் பெரும் கடன்களைச் சுலபமாகப் பெறக்கூடிய நிலையில் இருப்பதாலோ மகிந்த ராஜபக்ச குடும்பத்தினால் கட்டுப்படுத்தப்படும் இலங்கை அரசு அபிவிருத்தி அரசு ஆகிவிடாது. 

மேற்கூறியவற்றில் இலங்கை அரசிடம் இருக்கும் ஒரு பண்பு தொழிலாள வர்க்கத்தையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதாகும்.இது அடக்குமுறைத்தன்மை கொண்ட எல்லா அரசுகளுக்கும் பொதுவான பண்பு. இன்றைய நவதாராள உலக சூழ்நிலையில் ஒரு அரசை அபிவிருத்தி அரசாக சீரமைப்பது சுலபமல்ல. அதேவேளை இலங்கையின் உள்நாட்டு நிலைமைகளைப் பார்க்கும் போது அரசின் நடத்தை அபிவிருத்தி அரசின் தன்மைகளுக்கு மாறான போக்குகளையே காட்டுகிறது. இதை விளக்கச் சில உதாரணங்களை காட்ட விரும்புகிறேன். 

குறுகிய அரசியல் மயப்படுத்தப்பட்ட ஊழலும் நட்டமும் மிகுந்த அரச கூட்டுத்தாபனங்கள் 

நவதாராளவாதக் கொள்கையின் வருகைக்குப் பின்னரும் பல அரச கூட்டுத்தாபனங்கள் தனியுடைமையாக்கப்படாமைக்கான அரசியல் காரணம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இந்த நிறுவனங்கள் அரசினால் இலாபகரமாகவும் தனியார் துறையுடன் போட்டி போடும் வகையிலும் கூட்டுத்தாபனங்களை நடத்த முடியும் எனும் முதலாளித்துவ அபிவிருத்தி நோக்கில் அரசுடமைகளாக தொடர்ந்தும் இயங்குவன அல்ல. ராஜபக்ச ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்களின் பொருளாதார ரீதியிலான வினைஆற்றல் எந்த நிலையில் உள்ளது? இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கான பதிலைச் சமீபத்தில் (2013) வெளிவந்த இலங்கைத் திறைசேரியின் 2012 ஆம் வருட அறிக்கையில் காணலாம். இந்த அறிக்கையின் படி இலங்கையில் உள்ள 55 (ஐம்பத்தி ஐந்து) கூட்டுத்தாபனங்களும் 2005 ம் ஆண்டில் கூட்டு மொத்தமாக 32.3 பில்லியன் ரூபாய்கள்(32.3bn) இலாபத்தைக் கொடுத்தன. ஆனால் 2012 ல் – அதாவது ராஜபக்சவின் ஆறுவருட ஆட்சியில் இவற்றின் கூட்டு மொத்த நட்டம் 107.1 பில்லியன் (107.1bn) ரூபாய்கள் ஆகும். பெருநட்டத்தில் ஓடும் அரச கூட்டுத்தாபனங்களுள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா விமானசேவை, CTB போன்றவை அடங்கும். இலாபத்தில் இயங்குவன பொதுவாக அரசுக்கு சொந்தமான வங்கிகளும் காப்புறுதிக் கூட்டுத்தாபனமுமாகும். இங்கும் அரசாங்கம் வங்கிகளிடமிருந்து பெருந்தொகையான கடனைப் பெற்றுக் கொள்வதால் இவ்வங்கிகளால் தனியார்துறையினருக்கு கடன்வழங்கும் ஆற்றல் பாதிக்கப்படுகிறது. 

அரச கூட்டுத்தாபனங்களில் ஊழல் மற்றும் முகாமைத்திறனின்மை போன்ற குறைபாடுகள் பற்றி இப்போ சில உயர்மட்ட அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் வெளிப்படையாகப் பேச முற்பட்டுள்ளனர். உதாரணமாக திறைசேரிச் செயலாளர் கலாநிதி P.B.ஜயசுந்தர அரச கூட்டுத்தாபனங்களில் தகைமையற்றோர் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக தனது கருத்தை The Island (04.06.13) பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். சுருங்ககூறின் ராஜபக்ச ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்களின் கூட்டு மொத்தமான இயங்குதிறன் படுமோசம் படுதோல்வி எனலாம். இந்த ஆட்சியில் அரச கூட்டுத்தாபனங்கள் ஒரு சிலவற்றைத் தவிர முன்பை விட மோசமாகச் சீரழிந்து நாட்டின் பொருளாதாரத்தின் மீது பெரும் சுமைகளாவிட்டன. அரசுடைமைகளாக இருக்கும் பொருளாதார நிறுவனங்களைத் தேசிய பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் பயன்தரவல்லனவாக நிர்வாகிக்க முடியாத நிலையில் இருக்கும் நாட்டின் அரசை அபிவிருத்தி அரசு எனச் சொல்லமுடியுமா? 

அரசவருமானத்தின் விகிதாசார வீழ்ச்சி 
இலங்கை அரசின் அபிவிருத்திப்பணியின் இன்னொரு முக்கிய தோல்வி நேரடி வருமானவரித்திரட்டலின் வீழ்ச்சியாகும். 1978 ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product) 24 வீதத்தை இலங்கை அரசு வருமானமாகப் பல வரிகளுக்கூடாக வசூலித்தது. தற்போது இது 12-13 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது நேரடிவரியையும் மறைமுகவரியையும் உள்ளடக்குகிறது. தனியார்துறையினர், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் பெருமளவு வரி கட்டுவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அரசின் வருமானவரித்துறைத் திணைக்களத்தின் இயலாமையை இது காட்டுகிறது. ஆனால் இதற்கான அடிப்படைக் காரணம் ஊழலும் அரசியல் செல்வாக்குமாகும். இந்நிலை ராஜபக்ச ஆட்சியில் மோசமடைந்துள்ளது. நேரடியாகவரியை விதித்து வருமான வரியைத் திரட்ட முடியாத நிலையில் சகல பொருட்களின் மீதும் வரிகளை அதிகரிக்கும் வழியையே அரசாங்கம் வருடந்தோறும் பின்பற்றி வருகிறது. இதனால் பண்டங்களின் விலை ஏறுகிறது. இதன் விளைவாகப் பொதுமக்கள் மீதான பொருளாதாரச்சுமைகள் ஏறிக் கொண்டே போகின்றன. அவர்களின் வாழ்வாதாரமும் இளம்சந்ததியின் எதிர்கால மனிதவிருத்தியும் பாதிக்கப்படுகின்றன. வரித்திரட்டலில் அரசின் தோல்வியை அமைச்சர் DEW குணசேகர வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் பின்தள்ளப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் (The Sunday Island 05.05.13). அமைச்சர் குணசேகர நேரடிவரி இப்போது இருப்பதையும் விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அது நடைமுறைப்படுத்தப்பட்டால் மறைமுகவரி குறைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்குமெனவும் கூறியுள்ளார். தற்போதைய அரசவருமானத்தில் 80 வீதம் மறைமுக வரிகளுக்கூடாகவே பெறப்படுகிறது. பெருமுதலாளிகளும் ஊழலுக்கூடாகச் செல்வந்தராவோரும் வரி கொடாது செல்வாக்கு மிகு உயர் வர்க்கத்தினராக வாழ்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபடுவோரும் அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வரிசெலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அடங்குவர். 

கிடைக்கும் அரசவருமானத்தின் பெரும்பகுதி அரசஊழியர்களின் ஊதியம் மற்றும் இளைப்பாறியோரின் ஓய்வூதியம், அரசாங்கம் பெற்றுள்ள கடன்களின் வட்டி போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் மற்றய அரசாங்கச் செலவுகளுக்கு மீண்டும் கடன் பெறும் நிலையிலேயே இன்றைய ஆட்சி உள்ளது. பொதுவாகப் பொருளாதார நோக்கில் கடன்பெறுவது தவறானதல்ல. முதலீட்டுக்கூடாக கடன் பொருளாதார விருத்திக்கு உதவல்லது. ஆனால் கடன் எதற்காகப் பெறப்படுகிறது, எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமாகும். இந்த வகையில் இந்த அரசாங்கத்தின் போக்கினை கடன்வாங்கிக் கோலாகலமாகக் கலியாணம் நடத்திய பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வழிதெரியாது திக்குமுக்காடும் மனிதரின் நிலைக்கு ஒப்பிட்டுள்ளார் ஒரு பொருளியலாளர். 

பயன்தர மறுக்கும் பாரிய அரச மூதலீடுகளும் ஏறும் கடன்பளுவும்வெளிநாட்டில் கடன்பெற்று – விசேடமாக சீனாவிடமிருந்து - பாரிய திட்டங்களை உருவாக்கி அவற்றைக் கவர்ச்சிமிகும் காட்சிப்பொருட்களாகப் பிரச்சாரம் செய்வது இன்றைய ஆட்சியாளர்களின் கைவந்த கலைகளில் ஒன்று. இந்த வரிசையில் அம்பாந்தோட்ட மகும்புர மகிந்த ராஜபக்ச துறைமுகமும் மத்தல மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையமும் பெரும் முதலீடுகளாகும்.இவை இரண்டுமே சீனாவின் கடனில் சீனநிறுவனங்களின் நேரடிப் பங்குபற்றலுடன் அமுல் நடத்தப்பட்டன. துறைமுகத்திற்கு 1.4 bn (பில்லியன்)அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதுடன் ஏறக்குறைய 7000 சீனப் பணியாளர்களையும் சீனா அனுப்பியது. துறைமுகம் கோலாகலமாகத் திறக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுவரை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கப்பல்களே அங்கு நங்கூரம் பாய்ச்சியுள்ளன. உண்மையில் கொழும்புத்துறைமுகத்திற்குச் சென்ற கப்பல்கள் சிலவற்றை துறைமுக அதிகாரநிறுவனம் அம்பாந்தோட்டைக்குச் செல்லும்படி செய்ததாகச் செய்திகள் சொல்லுகின்றன. இலங்கையின் மிகப் பெரிய புத்தம் புதிய துறைமுகம் பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் அதேவேளை சீனாவிடம் இருந்து பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதற்குக் கொழும்புத்துறைமுகத்தின் வருமானத்திலேயே அரசு தற்போது தங்கியுள்ளது. 

கொழும்புத்துறை முகத்தையும் விஸ்தரிக்கும் திட்டத்திற்கும் சீனா கடன் வழங்கியுள்ளது. இந்த நிர்மாணத்தினால் கொழும்புத்துறைமுகத்தின் வசதிகள் மேலும் விருத்தி பெற்றுள்ளன. அம்பாந்தோட்டையில் ஒரு பாரிய துறைமுகம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவைப்பட்டதா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே பலரால் எழுப்பபட்டது. இது ராஜபக்சக்களின் பேராசையேயின்றி நாட்டின் முன்னுரிமையல்ல. இதைப் போன்றதே மத்தல ராஜபக்ச விமான நிலையமும். ஆனால் இந்தப் போக்குத் தொடர்கிறது. இது தொடர்வதற்கு சீனா வழமை போல் கடன் வழங்கத்தயாராவுள்ளது. 2012 இறுதிவரை சீனாவிடமிருந்து 8.6 bn (பில்லியன்) அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது. 2013 ல் ஜனாதிபதி சீனாவுக்குச் சென்றிருந்த போது மேலும் 2.2bn அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்க சீனா முன்வந்துள்ளது. சீனாவின் கடன் சர்வதேச நாணயநிதி மற்றும் உலகவங்கி வழங்கும் கடன்களை விட அதிக வட்டி வீதத்தைக் கொண்டது. அத்துடன் சீனா கொடுக்கும் கடனின் கணிசமான பகுதி பல வழிகளுக்கூடாக சீனாவின் கொம்பனிகளுக்கு மீளப்போகிறது. இத்தகைய கடனைத் திருப்பிக் கொடுக்குமளவிற்கு அது வழங்கப்பட்டுள்ள திட்டங்களால் நாட்டுக்கு வருமானம் கிட்டவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒரு சிலர் பயனடைந்துள்ளனர். இன்று இலங்கையின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP இன்) 80 வீதமாகும். இது குறையும் சாத்தியப்பாடுகளில்லை. தொடர்ந்தும் கடன் பெறும் நிலையிலேயே இலங்கை உள்ளது. 

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின்மைஇலங்கை தற்போது ஒரு கீழ் மத்திய வருமான நாடாக உயர்த்தப்பட்டுள்ளது பற்றியும் நாட்டின் சராசரி தலா வருமானத்தின் வளர்ச்சி பற்றியும் நிறையக் கேள்விப்படுகிறோம். உண்மைதான். அதேவேளை சமூகரீதியான பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துள்ளன என்பதும் உண்மை. இலங்கையின் பொருளாதாரத்தின் இன்னொரு முக்கிய பிரச்சனை பற்றி நாம் அதிகம் கேள்விப்படுவதில்லை அதுதான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிப் போதாமை. உலக ரீதியில் பார்க்கும் போது இது மேலும் முக்கியத்துவம் அடைகிறது. இதுவரையிலான பொருளாதார வளர்ச்சி – குறிப்பாக ஆலைத்தொழில் துறையின் வளர்ச்சி – சர்வதேச மட்டத்தில் பார்க்கும் போது ஆலைத்தொழில் மயமாக்கலின் ஆரம்பக்கட்டத்திலேயே தங்கியுள்ளது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பண்டங்கள், உடுபுடவை, தேயிலை, இறப்பர் பொருட்கள், இரத்தினக்கற்கள் மற்றும் தென்னம் பொருட்கள். இவற்றுள் உடுபுடவை உற்பத்தித்துறை 1977 க்குப் பின்னர் விருத்தி பெற்றுள்ளது. இந்த துறைகளின் தொழில்நுட்ப மட்டங்கள் இலங்கை போன்ற கட்டத்திலிருக்கும் மற்றய நாடுகளின் நிலைமைகளுடன் ஒப்பிடக் கூடியவையே. எதிர்கால நோக்கில் பொதுவாக மற்றய துறைகளிலும் இலங்கையின் தொழில்நுட்ப மட்டமும் உற்பத்தித்திறனும் சர்வதேச ரீதியில் போட்டித்திறன் குன்றிய நிலையிலேயே உள்ளன. இது அடுத்த கட்டங்களை நோக்கிய நகர்ச்சிக்குத்தடையாக அமையலாம். 

பல ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் எழுத்தறிவு மட்டம் உயர்வாக உள்ள போதும் நாட்டின் உற்பத்தி சக்திகளை வளர்க்கும் நோக்குடன் தொழில் நுட்பத்திறனைப் பரவலாக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப உட்கட்டுமானமும் அத்துடன் இணைந்துள்ள நாடளாவிய நிறுவனங்களும் குறைவிருத்தி நிலையிலேயே உள்ளன. 1970-1990 களின் கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது தெளிவாகிறது. பயன்தராப் பாரிய திட்டங்களில் செலவிடும் வெளிநாட்டுக்கடனை மனிதமூலதனத்தின் விருத்திக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அது உற்பத்திசக்தி வளர்ச்சிக்கு உதவியிருக்கும். ஆனால் ஆட்சியாளரின் – குறிப்பாக சர்வஅதிகாரத்தையும் கொண்ட ஜனாதிபதியின் – முன்னுரிமைகளோ வேறு. 

போருக்குப் பின்னரும் "பாதுகாப்புமயமாக்கல்" முன்னுரிமை பெறுவதால் இராணுவமயமாக்கலுக்கு வருடம் தோறும் பெருமளவு பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கப்படும் வீதம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு மோசமடைந்துள்ளது. இதன் விளைவு மனிதவளத்தின் குறைவிருத்தி என்பது கண்கூடு. தென்ஆசியாவிலே அதி உயர்ந்த எழுத்தறிவு வீதம் மற்றும் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் போன்றவற்றைக் கொண்ட நாடாக இருப்பினும் உற்பத்திசக்தியின் விருத்திக்கு உதவும் வகையிலான வசதிகளின் போதாமையைக் கவனிக்கத் தவறிவிட்டன இதுவரையிலான ஆட்சிகள். உண்மையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் ஆகியன முன்னைய சமூகநலக் கொள்கைகளின் விளைவானவை என்பதை மறத்தலாகாது. 1977க்குப் பின்னர் தனியுடைமையாக்கல் போக்குகளினால் கல்வியும் மனித சுகாதாரமும் தனிமனித ரீதியில் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப வேறுபடுகின்றன. 

மறுபுறம் பெரும்பாலான குறிப்பாகக் கிராமப்புற அரச பாடசாலைகளின் வசதிகளில் தராதரங்களில் போதியளவு முன்னேற்றமில்லை. பல பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறையாலும் குறிப்பாகத் தகைமை வாய்ந்த இயற்கை விஞ்ஞான, கணித, சமூகவிஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்களின் போதாமையாலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளன. இதன் காரணமாக இலங்கையின் தேசிய எழுத்தறிவு வீதம் 96 எனப்படும் போதும் அதன் தன்மை ரீதியான மட்டம் கேள்விக் குறியாகிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் உற்பத்தி சக்திகளின் விருத்திக்குப் பலமான கல்வி அடித்தளம் இன்றியமையாதது. எழுத்தறிவு வீதம் எனும் எண்ணை மட்டும் வைத்து இதை அளவிட முடியாது என்பதை இலங்கை நிலமை காட்டுகிறது. இது பற்றி சமீப காலங்களில் பல அறிக்கைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. 

ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் வேலைவாய்ப்பற்ற பொருளாதார வளர்ச்சிஇலங்கையின் பொருளாதார வளர்ச்சிப்போக்கு சமூகரீதியிலும் பிரதேசரீதியிலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது என்பதை மத்தியவங்கி, உலகவங்கி போன்றவற்றின் அறிக்கைகளும் வேறு ஆய்வுகளும் காட்டுகின்றன. இந்தப் பொருளாதார வளர்ச்சியின் வீதத்திற்கேற்ப வேலை வாய்ப்புக்கள் வளரவில்லை. உதாரணத்திற்கு 2006க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் GDP(மொத்த உள்நாட்டு உற்பத்தி) 40 வீதம் வளர்ந்துள்ளது. ஆனால் இதே காலத்தில் வேலைவாய்ப்பு ஒரு வீதம் மட்டுமே வளர்ந்துள்ளது எனVerite Research (2013)ன் ஆய்வறிக்கை கூறுகிறது. (குறிப்பு: இத்தகைய ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் புள்ளிவிபரங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்குவதில்லை). இன்று இலங்கையில் உழைப்பில் ஈடுபட்டுள்ளோரில் 60 வீதத்திற்கும் மேலானோர் முறைசாரா(informal) பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளனர். முறைசார் பொருளாதாரத்தில் (formal economy)பங்குபற்றும் உழைப்பாளர்களுக்கே உரிமைகள் மறுக்கப்படும் இந்நாட்டில் முறைசாராப் பொருளாதாரத்தில் தங்கியிருப்போரின் நிலை மேலும் இடர்பாடானதென்பதைச் சொல்லத்தேவையில்லை. உண்மையில் ஏறக்குறைய 80 வீதமான பலவிதமான உழைப்பாளர்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு இல்லை எனலாம். உள்நாட்டில் வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்கும் ஒரு வழியாக அரசாங்கம் வெளிநாடுகளில் வேலே தேடுவதை ஊக்குவிப்பதை ஒரு கொள்கையாக்கி அதற்கென ஒரு அமைச்சரையும் நியமித்துள்ளது. இலங்கையின் தொழிற்படையின் அங்கத்தவர்களில் இருபது இலட்சத்தினர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். 2010ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி இந்தத் தொகை நாட்டின் தொழிற்படையின் 23.8 வீதமாகும். இவர்களில் 90 வீதத்தினர் மத்திய கிழக்கு நாடுகளில் கடமையாற்றுகிறார்கள். இதில் 80 வீதத்தினர் துறைசார்பயிற்சித் திறனற்ற(unskilled) ஊழியர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 60 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இந்தப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாகப் பலவித இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றுகிறார்கள். இந்த வெளிநாட்டு உழைப்பாளர்களே இலங்கையின் வெளிநாட்டுச்செலாவணியின் மிகப் பெரும் பகுதியை உழைத்துக் கொடுக்கிறார்கள். மத்தியகிழக்கு நாடுகளில் வீட்டுப்பணியாளர்களாக உழைக்கும் இலங்கைப்பெண்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாவது பற்றி நிறைய செய்திகளும் ஆய்வறிக்கைகளும் வெளிவந்துள்ளன. மறுபுறம் இத்தகைய நகர்ச்சியால் உள்நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றியும் பல செய்திகளும் ஆய்வுக்கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. 

உள்நாட்டில் ஊழிய உறவுகள் பெருமளவு தற்காலிகமயப்படுதல் மற்றும் தொழில் தேடி வெளிநாட்டுக்குப் பயணித்தல் போன்ற போக்குகள் தொடர்ச்சியாக பெண்பால் மயமாக்கப்பட்டு (Feminisation) வருவதைக் காண்கிறோம்.வர்க்க ரீதியான சுரண்டலின் பால்ரீதியான பரிமாணத்தையும் உழைப்பின் சுரண்டலை அதிகரிக்க ஆணாதிக்க அடக்குமுறை பயன்படுத்தப்படுவதையும் காணத்தவறக்கூடாது. இத்தகைய போக்கு கிழக்குஆசியாவிலும் இருந்தது. ஆனால் அங்கு பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியதுடன் உற்பத்தி சக்திகளின் விருத்திக்கான வசதிகளும் இருந்தன. இப்படிச் சொல்வது பெண்கள் மீதான சுரண்டலையோ அடக்குமுறையையோ நியாயப்படுத்துவதெனக் கொள்ளக்கூடாது. நான் சொல்ல விரும்புவதென்னவெனில் உழைப்பை மேலும் திறமையாகச் சுரண்டுவதற்கு விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் மூலதனம் கண்ணாயிருக்கும் இடத்திலேயே முதலாளித்துவத்தின் அபிவிருத்தியும் ஏற்படுகிறது. 


03. 
வடக்கில் நடப்பதென்ன? 
அழகெனப்படுவது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்பார்கள். இது அபிவிருத்திக்கும் பொருந்தும். ஒருவர் அபிவிருத்தி என்பதை இன்னொருவர் மறுக்கலாம். வடக்குக் கிழக்கில் போருக்குப் பின்னான அபிவிருத்தி பற்றி அரசாங்கத்தின் பிரச்சாரம் ஓய்வின்றித் தொடர்கிறது. 'கிழக்கின் உதயம்' 'வடக்கின் வசந்தம்' அழகான வார்த்தைகள். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. தமது பிரச்சாரத்திற்குத் துணையாகப் பல செயற்பாடுகளை ஆட்சியாளர் காட்டுகிறார்கள். உட்கட்டுமானத்திட்டங்கள், உல்லாசவிடுதிகள், மீள்குடியேற்ற செயற்பாடுகள், புதிய கட்டிடங்களின் திறப்பு விழாக்கள் போன்றவை பிரச்சாரத்தின் காட்சிப் பொருட்கள். புதுப்பிக்கப்பட்ட A9 பாதை வடக்கின் வசந்தத்தின் பாதைப் போல் படுகிறது. ஆனால் "உதயத்திற்கும்" "வசந்தத்திற்கும்" மறுபக்கங்கள் உண்டு. 

சமீபத்தில் நானும் A9 பாதையில் யாழ்வரை சென்று வந்தேன். குடாநாட்டிலும் வன்னியிலும் பலவற்றைக் கண்டேன். பலருடன் கலந்துரையாடினேன். நடைபெறும் 'அபிவிருத்தியின்' அரசியல் பற்றிக் கருத்துப்பரிமாறினேன். அரசியல் தீர்வை நிராகரிக்கும் ஆட்சியில் அபிவிருத்தி அடக்குமுறையின் கருவியாக்கப்பட்டுள்ளது என்பதே எனது முடிவு. இந்தக் கருத்தினை 15.04.2013 ல் நான் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தேன். அங்கே மாற்றங்கள் இடம்பெறவில்லை என்பதல்ல. அங்கு முதலீடுகள் இல்லை என நான் சொல்லவில்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை என்பதுமல்ல. ஆனால் இவை அனைத்தும் அடிப்படை மனித சுதந்திரங்களை தமக்குப் பெறுமதிமிக்கதெனக் கருதும் இருப்புக்களையும் செயற்பாடுகளையும் தேடி அனுபவிக்கும் சுதந்திரத்தை உரிமைகளுக்காகக் கூட்டு முயற்சி எடுக்கும் சுதந்திரத்தை எல்லாம் மறுக்கும் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சிமுறைக்குள்ளே இடம் பெறுகின்றன. 

'அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தி A9 தெருவோரங்களுக்கப்பால் செல்லவில்லை’ என வன்னியில் நான் சந்தித்த ஆசிரியர் ஒருவர் சொன்னார். வன்னிக்கு உள்ளே செல்பவர்கள் குறைவிருத்தியின் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களின் நிலத்தோற்றத்தைக் காண்பார்கள். வசந்தத்தின் வருகைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. தமது வாழ்வை மீட்டெடுக்கத்தினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அடிப்படைத் தேவைக்களுக்கான போராட்டம்.போர்காலத்தில் புலிகளின் இராணுவ ஆட்சியில் வாழ்ந்த இம்மக்கள் இப்போ "அமைதி" காலத்தில் இலங்கை அரசின் இராணுவ ஆட்சியில் வாழ்கிறார்கள். 

வடக்குக்கிழக்கின் போருக்குப்பின்னான அமைதி ஒரு எதிர்மறை அமைதி (Negative Peace) அங்கே முன்பு போல் யுத்தமும் இல்லை. போர்காலத்து சோதனை நிலையங்கள் பொதுவாக மூடப்பட்டுள்ளன. ஆனால் இராணுவமயமாக்கல் தொடர்கிறது. நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. மனிதபாதுகாப்பு அரசின் பாதுகாப்புக்குக் கீழ்படுத்தப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்தை முற்றாக அழித்த ஒரே நாடு' என அரசாங்கம் மார்தட்டி உலகுக்கு அறிவித்துக் கொள்ளும் அதேவேளை மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்கும் ஆபத்து உள்ளது என்றும் தேசத்தின் இறைமையே எல்லாவற்றையும் விட முதலானது என்றும் பாதுகாப்புமயமாக்கலை (Securitisation) நியாயப்படுத்துகிறது. இந்த நிலைமைகள் "அரசியல் என்பது உண்மையில் வேறு வழிகளுக்கூடான போரின் தொடர்ச்சியே" எனும் Foucault (1976) ன் வாசகத்தை நினைவூட்டுகின்றன. இது Clausewitz (1832) ன் பிரபல்யமான வாசகமான "போர் என்பது மாற்றுவழிக்களுக் ஊடான அரசியலின் தொடர்ச்சியே" என்பதை தலைகீழாக்குகிறது. 

வடக்கின் வசந்தம்: மத்தியமயப்படுத்தப்பட்ட செயலணி 
2009 ஐந்தாம் மாதம் போர் முடிவுக்கு வந்தபின்னர் வடக்கின் அபிவிருத்திக்குப் பொறுப்பாக திரு பசில் ராஜபக்சவின் தலைமையில் ஜனாதிபதி செயலணி (Presidential Task Force – PTF) உருவாக்கப்பட்டது. இதற்கு 19 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட நிர்வாகிகளும் ஆவர்.இந்த PTF ல் வடக்கு சமூகத்தைச் சார்ந்த ஒருவர்கூட இல்லை.வடக்கின் அபிவிருத்தியை இராணுவத்தினதும் மத்திய அரச நிர்வாகத்தினதும் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வழி நடத்தும் திட்டமிட்ட நோக்கிலேயே இந்தச் செலயலணி உருவாக்கப்பட்டதென்பது அதன் அமைப்பிலும் உள்ளடக்கத்திலுமிருந்து வெளிப்படையாகிறது. எதுவிதமான பிரதேச ரீதியான அற்ப அதிகராப்பகிர்வுக்குக் கூட இடமளிக்காத வகையிலே வடக்கின் போருக்குப்பின்னரான அபிவிருத்தியின் நிர்வாக ரீதியான சட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்குடன் ஒப்பிடும் போது நடைமுறையிலிருந்து பெருமளவு வேறுபடாவிட்டாலும் நிறுவன ரீதியில் PTF ன் அதிகாரம் விசேட முக்கியத்துவம் கொண்டதென்பதைக் சுட்டிக்காட்டத்தேவையில்லை. 

மாகாணசபை கூட இல்லாத நிலையில் இராணுவஆட்சியின் கீழ் பாதுகாப்பைக் காரணம் காட்டி நிலஅபகரிப்புக்களை செய்வது சுலபமாகிவிட்டது. அதேபோன்று பாதுகாப்பின் பெயரால் சிவில்சமூகத்தையும் அரசுசாரா நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதும் சுலபமாகி விட்டது. வடக்கில் மாகாணசபை உருவாவதை முடிந்தவரை தவிர்க்கும் நோக்குடனேயே அபிவிருத்தி எனும் போர்வைக்குள் இராணுவமயமாக்கலும் நிர்வாகத்தின் மத்தியமயமாக்கலும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன என்பது தெளிவாகிறது. 

அபிவிருத்திப் பிரச்சனைகளும் மனித மேம்பாட்டுத்தடைகளும் 

வடக்கிலும் கிழக்கிலும் பல அபிவிருத்திப்பிரச்சனைகள் உண்டு. இவை மனித மேம்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களின் பலவீனங்களும் ஸ்திரமின்மையும் அவர்களின் மனித மேம்பாட்டின் விருத்தியைப் பாதிக்கின்றன. மறுபுறம் மனித ஆற்றலின் குறைவிருத்தி அவர்களின் வாழ்வாதாரங்களின் விருத்தியைப் பாதிக்கின்றது. இத்தகைய பிரச்சனைகளைத் தனிமனித மட்டத்திலோ குடும்பமட்டத்திலோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அவற்றைப் பரந்த அரசியல் பொருளாதார மட்டத்தில் இனங்காணல் அவசியம், போரினதும் சுனாமியினதும் விளைவுகளுடன் போருக்குப் பின்னர் நடைபெறும் மாற்றங்களும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. 

நிலம் மற்றும் கரையோரவளங்கள் மீதான கட்டுப்பாடுகள், உடைமை மாற்றங்கள் பலரின் வாழ்வாதாரங்களைப் பாதித்துள்ளன. மூன்று தசாப்தங்களாகப் போர் வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரத்தைக் கரையோரக் கடல்வளங்கள் போன்றவற்றை கைக்கொள்ளும் சூழலையும் சாத்தியப்பாடுகளையும் தொடர்ச்சியாகப் பாதித்தது. இடம்பெயர்வுகள் எப்போதும் ஆயுதப்போரின் தவிர்க்கமுடியாத விளைவுகள் அல்ல. வடக்குக்கிழக்கில் பெருமளவிலான இடப்பெயர்வுகள் இலங்கை இராணுவத்தினதும் விடுதலைப்புலிகளினதும் திட்டமிட்ட நடவடிக்கைகள் ஆகும். உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவத்தளங்கள், பாதுகாப்புஅரண்கள் போன்றவற்றினால் மக்களின் வாழ்வும் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டன. மக்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரங்களும் இருசாராரின் இராணுவ அரசியல் முன்னுரிமைகளுக்குக் கீழ்படுத்தப்பட்டன. ஆகவே திட்டமிட்ட இடப்பெயர்வுகளும் இனச்சுத்திகரிப்பும் இரு கட்சிகளினதும் பொதுப்பண்பாக இருந்தது. இடப்பெயர்வு, வாழ்வாதாரங்களின் இழப்பு, உழைப்பாற்றல் கொண்ட குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு, சுகாதார கல்வி வசதிகளின் சீரழிவும் இழப்பும் எல்லாம் தற்காலிக மனிதாபிமான பிரச்சனைகளாக மட்டுமே இனங்காணப்பட்டு இவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிறுவனங்கள் உதவிகளை வழங்கினர்.இந்த மனிதாபிமானப்பிரச்சனைகள் எதிர்பார்த்ததையும் விட நீண்டகாலப் பிரச்சனைகளாயின. நிவாரண நிறுவனங்களின் மனிதாபிமானப்பங்கு பாரட்டப்பட வேண்டியதே. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட சந்ததியினருக்குப் பயனுள்ள சுகாதார கல்வி மற்றய தொழிற்பயிற்சி வசதிகளும் வாய்ப்புக்களும் கிட்டவில்லை. இவற்றின் விளைவுகள் மனித அபிவிருத்திக்கு குறிப்பாக இளம் சந்ததியினரின் முன்னேற்றத்திற்குத் தடைகளாயின. இதனால் ஏற்பட்ட மனித ஆற்றலின் குறைவிருத்தி தனிமனிதரினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் தடையாக இருக்கிறது. 

வடக்கு கிழக்கில் நிலமும் கரையோர வளங்களும் மக்களின் வாழ்வாதாரச்சாதனங்கள் அல்லது தனியார் துறையின் முதலீட்டுக்கான பொருளாதார வளங்கள் மட்டுமல்ல இவை அங்கு வாழும் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் கூட்டு அடையாளங்களுடனும் கலாச்சாரவாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையன. இது ஆழமான முரண்பாடுகளாகிப் பெரிய அரசியல் பிரச்சனையாகிவிட்டது. குறிப்பாக தமிழ்மக்களின் தாயகக் கோரிக்கையும் அரசகாணிகளில் குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புக்கும் எதிராக இவ்விரு சமூகத்தினரும் தெரிவிக்கும் எதிர்ப்பும் போருக்குப் பின்னர் முக்கிய பிரச்சனைகளாகிவிட்டன. தாயகக் கோரிக்கையை நிராகரித்து இராணுவரீதியான வெற்றிக்கூடாக முழுப்பிரதேசத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள அரசு அந்தப் பிரதேசம் மீதான பூரண கட்டுப்பாட்டை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காத வகையிலே அதன் வளங்களின் உடைமை உறவுகளை மீளமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி ஏற்கனவே விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன் (பார்க்க- சமகாலம் ஒக்ரோபர் 1-15/2012.). 

போருக்குப்பின்னர் தொடரும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இவற்றை நிரந்தரமாக இராணுவமுகாம்களாவும் குடியிருப்புக்களாகவும் மாற்றும் திட்டங்கள், விசேட பொருளாதார வலயங்களின் பிரகடனங்கள், பெளத்த புனித பிரதேசப் பிரகடனங்கள், இனரீதியில் ஜனத்தொகை விகிதாசாரத்தை மாற்றும் நோக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களை முன்பு தொடர்பற்ற பிரதேசங்களுடன் நிர்வாக ரீதியில் இணைத்தல் போன்ற மாற்றங்கள் புதிய இடப்பெயர்வுகளை ஏற்படுத்துவதுடன் நிலம், கரையோரவளங்களில் தங்கியிருப்போரின் மீள்குடியிருப்பு வாழ்வாதாரங்களின் மீள் நிர்மாணரிப்பு போன்றவற்றை மேலும் உறுதியற்ற நிலைக்குத்தள்ளி அவர்களை இடர்பாட்டுக்குள்ளாக்குகின்றன. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் இராணுவப்பிரதேசமாக இருந்த பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 6381 ஏக்கர் (25.8 சதுர கிலோ மீட்டர்கள்) நிலப்பரப்பைப் பாதுகாப்புப்படையின் தலைமையகத்திற்காக எடுத்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெயர்ந்து வாழும் இந்த நிலங்களின் உரிமையாளர்களும் ஆதரவாளர்களும் இராணுவத்தின் நிலஅபகரிப்புக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய நிலஅபகரிப்பு ஒரு ஒற்றையான நிகழ்ச்சி அல்ல. அரசின் பாதுகாப்பு, இறைமை எனும் காரணங்களைக் காட்டி இத்தகைய நில அபகரிப்புத் தொடரலாம்.அத்துடன் "பழைமை வாய்ந்த" புனித இடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படலாம். மறுபுறம் அபிவிருத்தியின் பெயரால் உயர்பெறுமதி உள்ள வளங்களை பெருமுதலீட்டாளர்கள் கைப்பற்றலாம். இவை எல்லாம் சுமூகமாக நடைபெற வேண்டுமானால் ஜனநாயக மயமாக்கல், அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு போன்றவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டில் இனப்பிரச்சனை என ஒன்றில்லை. இருந்தது, ஒரு பயங்கரவாதப்பிரச்சனை மட்டுமே. அது தீர்ந்து விட்டது. இப்போது இந்த நாடு எல்லா இலங்கையருக்கும் சொந்தம் என்கிறார் ஜனாதிபதி ஆனால் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பொதுபலசேனா(BBS) அப்படியல்ல இது சிங்கள பெளத்த நாடென்கிறது. 

மீள்குடியேற்றம் இன்னும் முடிவு பெறாத ஒரு கதையாகத் தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை. இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை நிரந்தரமாக இழந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்துள்ளோரின் சரியான தொகையை அறிவது கடினம். அரசாங்கத்தைப் பொறுத்தவரை மீள்குடியேற்றம் வெற்றிகரமாக முடிவேறிவிட்டது. ஆனால் International Displacement Monitoring Centre ( IDMC)ன் 2012 ம் ஆண்டு ஒன்பதாம் மாத அறிக்கையின் படி 115.000 மேற்பட்ட இடம்பெயர்ந்தோர் உள்ளனர். இவர்களில் ஒருபகுதியினர் முகாம்களிலும் பெரும்பகுதியினர் வேறு குடும்பங்களுடனும் தங்கியுள்ளனர். 

வேறு சமீபத்திய அறிக்கைகள் பல்லாயிரக்கணக்கான விதவைகளின் அல்லது பெண்களைத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களின் இடர்பாடுகள் பற்றி அறியத்தருகின்றன. ஐநாவின் சேவைநிறுவனமான IRIN மற்றும் உள்நாட்டில் இயங்கும் சில அரசுசாரா நிறுவனங்கள் இந்தப் பெண்களின் தற்போதைய நிலமை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன. 

வடக்கில் இடம்பெறும் உட்கட்டுமான மற்றும் கட்டிட நிர்மாணத்திட்டங்களில் ஆண்களைவிடப் பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கள் குறைவு. நடைமுறையில் இரு பாலாரும் எதிர்கொள்ளும் தொழிற்திறமையின்மையினால் இருக்கின்ற வேலைவாய்ப்புக்களினையும் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது தற்காலிக நாளாந்தக்கூலி வேலைவாய்ப்புக்கள் அன்றாட உயிர்வாழலுக்கு உதவமுடியும். ஆனால் இவை குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஸ்திரமான நீண்ட கால அடித்தளத்தைக் கட்ட உதவ மாட்டா. இது ஆண்தொழிலாளர்களுக்கும் பொருந்தும் ஆயினும் பெண்கள் மிக்க குறிப்பாக விதவைகள் வாழ்வாதார விருத்திச் சந்தர்ப்பங்களின்றி அவலங்களுக்குள்ளாகுவதற்கு தமிழ் சமூகத்தின் பிற்போக்கான ஆணாதிக்க விழுமியங்களும் அதிகார உறவுகளும் முக்கிய காரணங்களாகும். போருக்குப்பின்னரான அபிவிருத்தி ஜனநாயக உரிமை மறுப்பு இராணுவமயமாக்கலில் ஆழமாகப் படிந்துள்ள ஆணாதிக்கப்போக்கு போன்றவை பெண்கள் மீதான பழைய ஒடுக்குமுறை அதிகார உறவுகளை மேலும் பலப்படுத்தி அவர்களின் அடிப்படையான பாதுகாப்பையும் இருப்புச்சுதந்திரத்தையும் சீரழித்துள்ளதை நாம் நேரிலே காண்கிறோம். இன்று பல்லாயிரக்கணக்கில் பால்ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு மனிதப்பாதுகாப்பற்றவர்களாகப்பட்டுள்ள நிலையிலுள்ள விதவைகள் மற்றும் முன்னை நாள் பெண் போராளிகளின் குழந்தைகளின் எதிர்காலமும் இருள் மயமாகவே உள்ளது. இந்தப்பிரச்சனை பற்றிச் சில பெண்கள் அமைப்புக்கள் குரலெழுப்பும் போதும் இதுவரை அது ஒரு சமூகப்பிரச்சனையாகப் பரந்த மட்டத்தில் உணரப்படவில்லைப் போலத் தெரிகிறது. இதை ஒரு சமூக – பொருளாதார – அரசியல் பிரச்சனையாக எழுப்புவது அவசியம். தமிழ்மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிநிரலில் இந்தப்பிரச்சனை இடம் பெற வேண்டும். 

சிறிய உற்பத்தியாளர்களாகவுள்ள விவசாயிகளின் மீனவர்களின் வாழ்வாதாரங்களின் ஸ்திரப்பாடு வளங்களைக் கைக்கொள்வதற்குமப்பால் வேறுவழிகளாலும் பாதிக்கப்படுகிறது. இவர்களின் வெளியீடுகளின் சந்தைப்டுத்தல் இவர்களையும் விட அதிகாரபலம் கொண்ட தரகர்களிலேயே தங்கியுள்ளது. வாங்குவோரால் ஓட்டப்படும் பண்டச்சங்கிலித்தொடரில் (Buyer- Driven commodity chain) இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். இந்த உறவில் பொதுவாக மொத்தமாகக் கொள்வனவு செய்வோரே (வாங்குவோரே) சிறிய உற்பத்திப்பண்டங்களின் விலையை நிர்ணயிக்கின்றனர். இவர்கள் நிறுவனரீதி பலமுள்ளவர்கள் அதுமட்டுமின்றி நகர்ப்புறம் மற்றும் ஏற்றுமதிச்சந்தைகள் பற்றிச் சிறு உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்காத தகவல்களையும் நன்கு அறிந்தவர்கள். ஸ்தாபன பலமற்ற நிலையிலுள்ள சிறு உற்பத்தியாளர்கள் வாங்குவோர் சொல்லும் விலையை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் மறுபாகங்களிலும் காணப்படும் ஒரு உலக ரீதியான பிரச்சனை. ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை போர்காலத்தின் குறைவிருத்தி தொழில்நுட்ப ரீதியான ஸ்தாபன ரீதியான பின்னடைவுகள் மனித வளத்தின் குறைபாடுகள் உற்பத்தி மூலதனச் சொத்துக்களின் அழிவு போன்ற காரணங்களால் இன்றைய உற்பத்தியாளர்கள் ஆழமான அசமத்துவமான அதிகார உறவுகளில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இந்த உறவுகள் தனியே பொருளாதார உறவுகள் மட்டுமல்ல. இங்கும் இராணுவமயமாக்கல் பொருளாதார உறவுகளுடன் கலக்கின்றன. வடக்கில் சிறு உற்பத்தியாளர் ஒரு புறம் தரகர்களிடம் கடனாளிகிறார்கள் மறுபுறம் விவசாயத்திலும் மீன்பிடித்துறையிலும் இராணுவத்தினர் ஈடுபடுவதால் மேலும் ஒரு அசமத்துவ உறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். வடக்கு மீனவர்கள் தம்மை விட மிகப்பலம் வாய்ந்த இந்திய மற்றும் தென்னிலங்கை மீன்பிடியாளர்களுடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளனர். 

இத்தகைய சந்தை உறவுகளின் விளைவாக சிறு உற்பத்தியாளரினால் சந்தைப்படுத்தக் கூடிய உற்பத்தியை போதியளவு அதிகரித்து லாபம் பெறக்கூடிய விலைக்கு விற்பது சுலபமல்ல. பலரைப் பொறுத்தவரை முடியாத காரியம். பலர் சந்தைத் தரகர்களிடம் கடனாளிகளாகிறார்கள். இது வறுமையின் மீள் உற்பத்திக்கு உதவுகிறது. 

சமீபகாலத்தில் வடக்கில் பலர் வங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையில் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு உழவு மற்றும் அறுவடை இயந்திரங்களை வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் மற்றும் தொழில் செய்ய வாகனம் தேவைப்படுவோருக்கு இலகுவாக கடன் வழங்க வங்கிகள் முன்வந்தன.பெரும் கடனைப்பெறுவது முன்பைவிடச் சுலபமாகவிருந்தது. ஆனால் அதை வட்டியுடன் திருப்பிக்கட்டமுடியாததால் பலர் முன்பைவிடவும் துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவரை இத்தகைய நெருக்கடிநிலை காரணமாக 19 தொழில்முனைவோர் தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகிறது. 

உழவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் வாங்கப்பெற்ற கடனை திருப்பிக் கட்டமுடியாது வாங்கிய இயந்திரங்களினை கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்தோர் பற்றிய கதைகளை கிளிநொச்சியில் கேள்விப்பட்டேன். இத்தகைய இயந்திரங்களினையும் மற்றும் வாகனங்களினையும் வாங்க கடன் பெறவிரும்புவோருக்குப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் வசதிகள் இல்லாமையும் ஒரு குறைபாடாகும். நான் அறிந்த தகவலின்படி ஒரு உழவு இயந்திரத்தின் விலை 12 இலட்சம் ரூபாய்கள் என்றால் அதில் 75 வீதத்தினைக் கடனாக பெறமுடியும். மிகுதி 25 வீதத்தினை கடன் பெறுவோர் செலுத்த வேண்டும். ஆனால் பலரிடம் மூன்று இலட்சம் ரூபாய்கள் சேமிப்பாக இல்லை. இவர்கள் இந்தப்பணத்தையும் தனிநபர்களிடமிருந்து கடனாகப் பெற்றே கட்டியுள்ளனர். இத்தகையோர் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வடக்கில், விசேடமாக குடாநாட்டில் வாழும் கணிசமான குடும்பங்களுக்கு வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் பணம் அனுப்புவதால் அவர்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது. இதன் விளைவாக வெளிநாட்டு நுகர்பொருட்களுக்கான கேள்வி உயர்வதால் வடக்கில் வாணிபம் வளர்ந்துள்ளது.அத்துடன் அங்கு ஒரு நுகர்வுவாத அலையும் எழுந்துள்ளது. வங்கிகளில் சேமிப்பும் அதிகரித்துள்ளது. ஆயினும் இந்தச் சேமிப்பு உபரி உள்ளூரிலேயே உற்பத்தி மூலதனமாக மாற்றப்படும் வாய்ப்புக்கள் வடக்கில் இன்னமும் அரிதாகவே உள்ளது. புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியினால் உருவாக்கப்படும் நுகர்வுக்கலாச்சாரம் எந்நேரமும் உடைந்து போகக்கூடிய குமிழிப்பொருளாதாரம். இதன் பாதகமான சமூகப் பொருளாதார விளைவுகள் பற்றிய உணர்வு குன்றிய நிலையிலேயே தமிழ்சமூகம் உள்ளது போல் தெரிகின்றது. 

போரினால் அழிவுக்குள்ளான பிரதேசங்களின் அபிவிருத்திக்குப் பல சவால்கள் உள்ள அதேவேளை பல புதிய சந்தர்ப்பங்களும் உண்டு. இந்தச் சந்தர்ப்பங்களை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விமோசனத்தை மையமாகக் கொண்டு அவர்கள் தமது கால்களில் எழுந்து நின்று முன்னேற்ற உதவும் வகையில் பயன்படும் கொள்கைத்திட்டங்கள் அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தவல்ல நிறுவனங்கள் அற்ற நிலையில் ஏற்கனவே போதிய மூலதனபலமும், அனுபவமும், அரசியல் செல்வாக்குமுடையோரே அவற்றினால் பயனடைவர். போருக்குப்பின்னான வடபகுதியின் அபிவிருத்தியை ஆளும் நிறுவன ரீதியான சட்டகம் இதற்குத்தான் உதவியுள்ளது. 

இந்தநிலை தானாக மாறப்போவதில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் இன்றைய சிக்கலான நிலைமையினை மேலும் பலப்படுத்தும் போக்கினையே கொண்டுள்ளனர். வடக்கு மக்களுக்கு மாகாணசபை கிடைப்பதனை தவிர்ப்பதற்காக 25 வருடங்களுக்கு மேலாக நடைமுறையிலிருக்கும் சட்டத்தினையே நீக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நீதியான மாற்றத்தை எதிர்பார்ப்பது அறிவிலித்தனமாகும். அரசியல் தீர்வுக்கும் ஜனநாயகமாக்கலுக்கும் சாதகமான ஆட்சிமாற்றத்திலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த வகையில் தமிழ் மக்களினதும் சிங்கள முஸ்ஸீம் மக்களினதும் எதிர்காலம் பின்னிப்பிணைந்துள்ளது. இதனை நோக்கிய போராட்டமே இன்று முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டமாகும். 

பேரா. என். சண்முகரத்தினம்
comments | | Read More...

கறைபடிந்த காலப்பகுதி - 02 ( யாழ்ப்பாண பொதுமக்கள் நூலக எரிப்பு )

தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாண பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, அறிவு, தன்மானம் என்று யாழ் நூலகத்தைச் சுட்டிக் காட்டலாம்.
ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக இந் நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்பவர் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான யோசனையை ஒன்றை முன் வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட பல புத்திஜீவிகள் 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த  திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும,; திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.
இம்முயற்சியின் விளைவாக  1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது.
1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டதுடன் இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.



சிறிது காலத்தின் பின் இந் நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியமும் நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தவாக மூன்று ரூபாய்கள் அறவிடப்பட்டது.
அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத்; நடாத்தப்பட்டன. இதனால் ஏராளமான நிதி நுல்நிலைய அபிவிருத்திக்காக திரட்டப்பட்டது.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப் பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப் பட்டது.
 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்களவிரினால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. இதற்காக திராவிடக் கட்டடக் கலை நிபுணரான மு. நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்து அழைத்து நூல் நிலைய நிர்வாகக்குழு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது.
முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ..துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம்-ஊநலடழn னுயடைல நேறள – வுயுஆஐடு NயுவுஐழுN)
1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.
31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ





வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.
அதன்பிறகு இனவெறியர்களின் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை; தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர்.
நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம்.
நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது. (மேற்கோள் : ஊநலடழn னுயடைல நேறளஇ உதயன், சுதந்திரன்)
நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.
அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே; தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் 'தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.'

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் அரசு நடாத்த வில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.



சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.















மேற்கோள்
இக் கட்டுரையானது எழுதுவதற்கு இதை பற்றி ஆற்வு செய்வதற்கும் சில கல்விமான்களின் நுல்களும் பத்திpக்கைகளும் உதவின. குறிப்பாக திரு நடேசன் சத்தியேந்திரா, விலானி பீரிஸ், நேசையா பேராசிரியர் நேசையா, வீ.எஸ்.துரைராஜா போன்றோருக்கு எனது நன்றிகள். திரு சிவநாயகம் அவர்களின் ளுசi டுயமெய றுவைநௌள வழ ர்ளைவழசல என்ற நூலும் பல அரிய தகவல்களைத் தந்தது. இது தவிர உதயன் சுதந்திரன், ஈழகேசரி , வலம்புரி ஆகிய பத்திரிக்கைகளிலிருந்தும் பல விடயங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1894-ம் ஆண்டு சிலோன் ஒப்சேவர் பத்திரிகை
1954-ம் ஆண்டு புதிய நூலகத்திற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது
நூலகச் செயற்பாடுகளையும் எரியுண்ட நூலகத்தின் புனர்நிர்மாணச் செயற்பாடுகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் எஸ். எம்.கமால்தீன் என்பவர் 'நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்' என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..
இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல்நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்' என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 திகதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.

நீலவண்ணன் எழுதி வரதர் வெளியீடாக 1981 ஜுனில் பிரசுரமான 'மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது' என்ற சிறுநூல் யாழ் நூலகப்படுகொலை பற்றிக் குறிப்பிடுவதாவது:

comments | | Read More...

nn

nn

Blogger news

Categories




dd

dd
 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger