News Update :
Home » » யுத்தம் தந்த வடுக்கள் வேதனைகள்

யுத்தம் தந்த வடுக்கள் வேதனைகள்

Penulis : anpusanthosh on Tuesday, July 16, 2013 | 8:28 AM

யாருமே எதிர்பாரத நேரத்தில் எதிர்பாரதா விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து '4' ஆண்டுகள் கடந்த நிலையிலும் யுத்தம் தந்த வடுக்கள் வேதனைகள் இன்றும் எமது மக்களால் அனுபவிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.


யுத்தம் நடைபெற்றக் கொண்டிருந்த காரத்தில் அனுபவித்த வேதனை போதாதென்று யுத்தத்தின் பின்னரான விளைவுகள் அதனை விட மோசமானதாக அல்லவா உள்ளது.அதிலும்  குறிப்பாக  கணவனை இழந்த குடும்பங்களை  தலைமை தாங்கும்  பெண்களின்  நிலை  அதிகரிப்பால்  அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  சொல்லித் தீராத சோகங்களை உண்டு பண்ணுகிறது.யுத்தத்தின் பின்  நம் தமிழ் சமுகத்தில்  பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை  பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் முகம் கொடுக்கும் சமுக பொருளாதார  கலாசார பிரச்சினைகள் அதிகரித்து செல்கின்றது.
குணவனை இழந்து தனித்து தனது குடும்பத்தினை  கொண்டு நடாத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும் பாதிப்புக்களும் அதனால் சமுகம் சார்ந்து எதிர் நோக்கும் சவால்களும் என எத்தனை துன்பியல்  நிலைமைகள் இவர்களை வட்டமிடுகின்றன. குறிப்பாக குடும்பம்  என்ற கட்டமைப்பையே யுத்தம் சிதைத்த விட்டது தென்று கூறலாம். இதுவரை சமுகத்தில் இவர்களுக்கிருந்த பாதுகாப்பு  நொடிப் பொழுதில் அவர்களை விட்டகல அங்கு உதித்த வாழ்க்கைக்குள் செல்ல எமது பெண்கள் தயாராக இருக்கவில்லை. இதனால் தமது குடும்பத்துக்கு தேவையான பொருளாதார தளங்களை அமைப்பதில் தனியாட்களாக  வகிக்க முயன்று தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.
இது பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் தொண்டு நிறுவனமான மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளாரான சரோஜா சிவச்சந்திரன்இ தெரிவிக்கும் போது;. யாழ்ப்பாண மாவட்டத்தில் 26இ340 பேரும்இ கிளிநொச்சியில் 5இ403 பேரும்இ வவுனியாவில் 4இ303 பேரும் மற்றும் மன்னாரில் 3இ994 பேரும் விதவைகளாக உள்ளனர். ஏன குறிப்பிட்ட அவர் மேலும் இந்த விதவைகளின் கணவன்மார் மோதல்களின் போது கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்; என்று சிவச்சந்திரன் விளக்கினார். யாழப்பாண மாவட்டத்தில் மட்டும் 40 வயதுக்கு உட்பட்ட 3இ118 விதவைகளும் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் 38 பேரும் உள்ளனர். 1இ042 பேர் அவர்களது கணவன்மார் தற்கொலை செய்து கொண்டதால் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்;. இவர்கள் தசாப்தக் கணக்கான யுத்தத்தின் விளைவினால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பலியானவர்களாவர். ''அவர்களுடைய கணவன்மார்இ அவர்களின் கண் முன்னால் கடத்தப்பட்டதைக் கண்டிருந்த போதிலும்இ தங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினால் அந்தப்பெண்கள் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர். பொலிசில்இ நீதிமன்றத்தில் அல்லது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தும் கூட அவர்களால் சரியான முடிவுகளை பெற முடியவில்லை. இன்னமும் அவர்கள் தங்களின் கணவன்மாருக்காக காத்திருக்கின்றனர்' என்று சிவச்சந்திரன் கூறினார்.
பல நடுத்தர வயதுப் பெண்கள் தனியாக வாழ்கின்ற அதேவேளை அவர்கள் சில தொண்டு நிறுவனங்களினதும் அல்லது அரசாங்கத்தினது அற்ப உதவியுடன் வாழ்கின்றனர். சில விதவைகள் அன்றாடம் கிடைக்கும் சிறிய கூலி வேலைகளூடாகவும் மற்றும் சிறிய வியாபாரங்களூடாகவும் வருமானத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர். விதவைகள் உட்பட பெண்கள் இ கூலிக்கு வேலை செய்வது இங்கு பொதுவான விடயமாகும். சிலர் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்இ அவர்களுக்கு கட்டாயம் மருத்துவ உதவி பெற்றுக்கொடுக்க வேண்டும்.;.

பற்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 46 வயதுடைய மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த சத்தியாவதி தெரிவிக்கும் போது  எனது கணவர் யுத்தம் இடம் பெற்றபோது இறந்து விட்டார். ஏனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு  எங்கடை குடும்பத்த பார்க்க யாரும் இல்லை எங்களுக்கு போதிய வருமானமும் இல்லை. புpள்ளைகளை படிக்க iகை;கிறாது ரொம்ப கஸ்டம் எதோ ஏன் இந்த வாழ்க்கை எண்டு இருக்கு எங்களுக்கு  'எந்த அரசியல் கட்சியும் வந்து எமக்கு உதவி செய்யவில்லை. அவர்கள் தேர்தல் நேரங்களில் மட்டும் வருகின்றனர்' என்றார். மற்றைய படி அரசாங்கம் மாதம் 150 ரூபா தருகின்றது. இது எங்கடை ஒரு மாதத்துக்கு போதும் என்பதை விட இந்த காசு ஒரு நாளைக்கு கூட போதாது. ஏன்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இவ்வாறு குடும்பத்தின் வருமானம் ஈட்ட வேண்டிய பாரிய பொறுப்பு சுமத்தப்படுவதால் தங்களின் இயலுமைக்கெற்ற தொழிலை தேடிக் கொள்ளகின்றனர். இது மட்டுமன்றி இவர்கள் தாயாகவும் தந்தையாகவும் செயற்பட வேண்டிய நிலையில் இந்த விதவைகள் இருப்பதால் பிள்ளைகளை பாரமாரிக்க முடியமால் அநாதை இல்லங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. மேலும்: வடக்குஇ கிழக்கு விதவைகளைப் பொறுத்தவரை அவர்கள்இ தொடரும் இடப்பெயர்வுகள்இ தொழில் வாப்பின்மைஇ வருமானம் போதாமைஇ பிள்ளைகளின் சுமைஇ வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் உளவியல் ரீதியாகவும் சமூகவியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.வடக்குஇ கிழக்கு விதவைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் கணவன்மாரை மட்டுமன்றி சொத்துக்களையும் அவர்கள் சார்ந்திருக்கின்ற சொந்த நிலங்களையும் வாழ்க்கையை கொண்டு நடத்த தேவையான ஆதாரங்களையும் இழந்து இன்னொரு வரில் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். அத்துடன் சமூகத்தின் பழிச்சொற்களுக்கும் அஞ்சியே இவர்கள் வாழ வேண்டியுள்ளது.
இது மட்டுமன்றி வறுமை ஒருபக்கம்  வாட்டுவது போதாதென்று  பாலியல்  தொந்தரவுகள்  பாலியல் சுரண்டல்களுக்கும் முகம்  கொடுக்கின்றார்கள்.   விதவை பெண்களுக்கு பொருளாதார ரீதியில் வலுவுட்டும் திட்டங்கள் செவ்வனே அமுல்பமுடுத்தப்படுகின்றதா? அவற்றின் பயன்கள்  அவர்களை சென்றடைகிறதா?  என்பதை கண்காணிக்கும் பொறிமுறை சிறப்பான முறையில்  மேற் கொள்வதோடு யுத்த விதவைகளின்  மற்றொரு முக்கியமான பாதுகாப்பு பிரச்சினையையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எனவே வடக்கிலும் கிழக்கிலும் உள்ள குடும்பத் தலை வரை இழந்துள்ள பெண்களுக்கு நீதி கிடைக்கவும் உரிய பாரமாரிப்பு விடைக்கவும் அரசாங்கம் ஏற்பாடு செய்தல' அவசியமாகின்றது. அதே சமயம் சகல அமைப்புக்களும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய கட்டாய நிலையும் உள்ளது.

Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger