News Update :
Home » » சாதி - மதம் மூடப்பழக்கம்

சாதி - மதம் மூடப்பழக்கம்

Penulis : anpusanthosh on Friday, August 26, 2011 | 1:46 AM

விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற அனைத்து உயிரினங்களிலும் பல இனங்கள் இருப்பதுபோல், மனிதர்களிடையேயும் பல இனங்கள் உண்டு.  வாழிடச் சூழ்நிலை, தட்ப வெப்ப நிலவரம், தோன்றிய காலம் இவைகளுக்குத் தக்கவாறு மனிதர்களில் சில இன வேறுபாடுகள் உண்டு.  சப்பை மூக்கு சீனர்கள், தடித்த உதடுகொண்ட நீக்ரோ இனம், மங்கோலிய இனம், மத்திய தரைக்கடல் ஐரோப்பியர், ஆஸ்த்ரோ‡ஆசியர் என பல மனித இனங்களில் முடி, முகவெட்டு, மண்டை ஓடு என , உடலளவில்மட்டுமே வேறுபாடு உண்டு.  இரத்த வகைகள் குறிப்பாக நான்கு. அவைகள் இந்த எல்லா இனங்களிலும் கலந்தே காணப்படுகின்றன.  தாய்க்கும், குழந்தைக்கும் வேறு வேறு இரத்த வகைகள் இருக்கலாம்.  ஆனால், ஒரே இரத்த வகை கொண்டவர்கள் அனைவரும் குறிப்பிட்ட குணநலன்கள் உடையவர்கள் என்று கூறிவிட முடியாது. (வனாவிலில் வண்ணம் ஏழு ஏழம் சேர்ந்துதான் அழகு மனிதர் ஜாதி ங்கு நுறு நுறும் சோந்துதான் உறவு நீயும் நானும் வெறல்ல வௌ;வேறானால் நாடென்ன ஒற்ற மனிதனால் ஆவதேன்ன தனி மரம் தோப்பாகது.ஓடி உழைக்கும் விவசாயி நிலத்தை பொன்னான செய்வான் ஒருவன் வியர்வை துளியலே உலகம் யாவும் செழிப்பாகும்வேதம் எதும் ,ல்லாமல் வர்க்கம் ஒன்றென்று வழுங்களே) ,ந்த பாடல் வரிகள் காட்டுகின்றது
 மூளை, அறிவு என்று வரும்போது அதன் அளவிலும் சரி, தரத்திலும் சரி, ஒரு இனத்திற்கு ஒரு வகை, பிரிதோர் இனத்திற்கு வேறு வகை என்று பிரித்துக்காட்ட முடியாது.  இதுதான் பல துறைகளில் முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப உலகம் ஒப்புக்கொண்டுள்ள உண்மையாகும்.  மனிதர்களில் சண்டை வந்துவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மைகள் எதுவும் இதில் கிடையாது.
 துருவித் துருவி ஆராய்ந்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அறிவியல் உண்மைகளுக்கு முற்றிலும் பொருந்தாத, மனிதர்களில் பல சாதிகள் என்ற கருத்து, நம் நாட்டில் மட்டும் பல நூற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.  சாதி வேறுபாடு காட்டி அடித்துக் கொள்(ல்)கிறார்கள்.  நீ தாழ்ந்தவன், அவன் உன்னைவிட இன்னும் தாழ்ந்தவன், இவன் மேலும் தாழ்ந்தவன்.  தொட்டால் பாவம், பார்த்தால் பாவம், படித்தால் பாவம்..... இப்படி கணக்கிலடங்கா மூட நம்பிக்கைகள்.. கட்டுக் கதைகள்..   எந்த ஆதாரமுமின்றி புனைந்து கட்டிய கதைகளை மட்டுமே நம்பி, திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டு சாதி வேறுபாடு இறுகிப்போயுள்ளது. சாதி பிறக்கும்போதே ஏற்பட்டுவிட்டதாக நம்பிவிட்டோம்.  எல்லாம் விதி என்றே எடுத்துக் கொள்ளப்பட்டது.  எல்லாம் கடவுள் செயல்.  அதை மாற்ற எவராலும் முடியாது.  ஏன் எதற்கு என்று அவரிடம் கேட்கவும் முடியாது.  அவர் செய்கின்ற அனைத்தும் நியாயம்.  நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அதுவே சரி என்று நம்பிவிட்டோம்.

 எனவே, உயர்சாதியில் பிறப்பதும், தாழ்ந்த சாதியில் பிறப்பதும் அவரவர் விதி.கடவுள், மதம், சடங்கு சம்பிரதாயங்கள், புராணங்கள், கதை கட்டுரைகள், இதிகாசங்கள், வேதங்கள் எல்லாம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, நம்மில் சாதிகள் என்னும் ஏற்பாட்டை புகுத்தி, கனகச்சிதமாக நிலை நிறுத்தி வந்துள்ளன.
பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்பதனை நடைமுறைப் படுத்தமுடியாத விதமாக ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு தரப்பட்டியல் உண்டு. அது உடைபடுவதில்லை உடைபட அனுமதிக்கப்படுவதுமில்லை. முயற்சித்தால் அது இராஜ துரோகம், கடவுளின் நிந்தனை என கருதப்பட்டது. உண்மையில் கடவுள் பயத்தை மீறி யாரும் முயற்சிக்கவில்லை.d
 அதேபோல், எல்லோரும் ஒரே கால அளவு உழைத்தாலும் ஒவ்வொருவர் வாங்கும் கூலி, சாதியின் இடத்திற்கு தகுந்தாற்போல மாறுபடும்.  அதற்கு இந்தந்த தொழிலுக்கு இந்தந்த இடம்தான் என்கிற கட்டுப்பாடு வேறு உண்டு.  குலத்தொழிலை விட்டு, வேறொரு தொழிலுக்கு யாரும் மாறவும் முடியாது.  செய்வதுமில்லை.  எனவே, அதிமுக்கியமான, மதிப்புமிக்க, தொழிலை சாதியினரின் ஏறுவரிசைப்படி செய்யுமாறு வகுத்துக் கொள்ளப்பட்டது.
 இன்றைக்கும் இத்தகைய சாதிப் பிரிவினை சமூகத்தில் நிலவி வருவது கண்கூடு.  ஒவ்வொரு சாதியையும் அடையாளப்படுத்தும் குலத் தொழில் கலாச்சாரம், பின்பற்ற இயலாமல் மறைந்துபோய் வருகிறது என்றாலும், குறிப்பிட்ட சதவீத மக்கள்,  குலத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்  அல்லது அதையயாட்டியே தொழில் செய்துவருகின்றனர்.  சிந்தனை பரந்து விரியவில்லை.  எத்தொழிலுக்கும் யாரும் போவது  ‡ என்ற கலாச்சாரம் இன்னும் பரவவில்லை.  தொழிலும், சாதியும் முழு முற்றாக பிரிக்கப்பட வேண்டும் என்பது நம் விருப்பமாகும்.  அப்போதுதான் ஒருவரது சிந்தனை, செயல் எல்லை விரிவடையும்.  அப்படி ஒவ்வொருவரும் தடையற்ற சிந்தனை செய்தால் நாட்டில் தொழில்வளம் பெருகும்.
 அடுத்து சாதிக் கலாச்சாரத்தின் மிகப் பெரிய பொருளாதாரக் குறைபாடு எதுவெனில். பெருமளவிலான மக்கள். விவசாயம், மீன்பிடித்தல், கால்நடை, காடுவளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு மிகக் குறைந்த பொருளாதார நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலை மாற வேண்டும் என்பதே கட்சியின் விருப்பமாகும்.
 எனவே, கல்வியறிவின்மை, அறியாமை போன்ற காரணங்களால், மக்களில் பல சாதியினர் இருக்கிறார்கள். அவர்களின் குணங்கள் மாற்றப்பட முடியாதது என்கிற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்.  அது ஏற்படுத்திய பொருளாதார தாழ்வு நிலையிலிருந்து பெருமளவிலான மக்கள் முன்னேற்றம் பெற வேண்டும்.  சாதிகளை தொடர்ந்து நிலைநிறுத்தும் விதமாக சாதி ஓட்டுகளை நம்பி அரசியல் செய்துவரும், அரசியல் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும்.  சாதி மத வேறுபாடுகளற்ற புதிய தமிழ்ச் சமுதாயம் மலர வேண்டும் என்பதே கட்சியின் கருத்தாகும்.
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger