News Update :
Home » » பொழுது போக்குடன் கூடிய வருமானம்

பொழுது போக்குடன் கூடிய வருமானம்

Penulis : anpusanthosh on Wednesday, July 17, 2013 | 7:39 AM

புறா முட்டையிட்டுக் குஞ்சுப்பொரிக்கும் பறவையினத்தைச் சார்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (ஊழடரஅடினையந) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 300 வகை இனங்கள் உள்ளன. புறாக்கள் உலகெங்கிலும் உள்ளன என்றாலும், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா முதலிய தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.  

இது பொழுது போக்குடன் கூடிய வருமானம். ஆனால் இதில்; முதலீடு, நோய்த் தாக்குதல், தீவனச் செலவு என சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், மிகக்குறைந்த முதலீடு, தீவனச் செலவு, நோய்த் தாக்குதல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்.. பொழுதுபோக்குடன், வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது புறா வளர்ப்பு! யாழ்ப்பாண மாவட்டம், கொழும்பு மாவட்டம் என இலங்கையின் பல இடங்களில் பல ஆண்டுகளாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனார். அவ்வாறனோரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது.. கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்.

ரொம்ப வருடமாக நாங்க செய்துகிட்டு வர்ற புறா வளர்ப்புதான் ஓரளவு கைக்கொடுக்குது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கா பழைய பெட்டியில் இரண்டு ஜோடியை விட்டு வளர்த்தோம். அது இன்றைக்கு ஒரு தொழிலா வளர்ந்து நிற்கிறது' என்று புறா வளர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவரித்தார் மட்டுவில் பகுதியை சேர்ந்த கண்ணன.;
'கோழி, முயல், காடை வளர்ப்பில் வருமானம் அதிகம். என்றாலும், அதற்கு ஏற்ப கூடு மின்சாரம், தண்ணீர், தீவனம்


என செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், புறா வளர்ப்பில் இது போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லை. புறாக்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு கூடு ஏற்பாடு செய்தால், போதும். மற்றபடி, எந்தத் தொல்லையும் வைக்காமல் அவை வெளியே சென்று இரையைத் தேடிக்கொண்டு, திரும்பிவிடும்.தீவனச் செலவே இல்லை! சிறிய அளவில் நான்க அல்லது ஐந்து ஜொடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி,
அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 18 நாட்களில் குஞ்சு பொறிக்கும். பின் 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் கிடைக்கும். வியாபார ரீதியா புறா வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சு பொறித்த 15 –ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால்.. கூடுதல் எடை கிடைக்கும். புறா வளர்ப்பைப் பொறுத்தவரை
இளம் குஞ்சுகளுக்குத்தான் கிராக்கி. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.;. பெரிய புறா ஜோடி 300 ரூபாய்க்கு விற்பனையாகும். ஒரு குஞ்சு 200 ரூபாய் வீதம் விற்பனை ஆனாலே .. ஒரு ஜோடிப் புறா மூலமாக ஆண்டுக்கு 2000 ரூபாய் கிடைக்கும். 50 ஜோடிகள் இருந்தால், அதன் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை அறை கட்டுவதற்கு அதிகபட்சம் ரூபா பத்தாயிரம்

புறாக்கள் முட்டை இட்டவுடன் ஆண் அல்லது பெண் புறாவில் ஒரு புறா இரு முட்டைகளின் மேல் தவம் செய்வது போல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும். மற்றொரு புறா அதற்கு துணையாக, காதலாக பக்கத்தில் காத்திருக்கும். 
அடை காக்கும் புறா எப்படி இரை தேடும், ஆண் புறா கொண்டு வந்து கொடுக்குமா என்ற கேள்விக்கு புறா ஆணாதிக்கவாதி அல்ல. இரவு முழுதும் அடைக்காக்கும் பெண் புறா காலையில் ஆண் புறாவிடம் அந்த வேலையை கொடுத்துவிட்டு இரை தேட சென்று விடுகிறது. மாலை வரை ஆண்  புறா அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்க பதினஞ்சிலிரிந்து பதினெட்டு நாட்கள் ஆகிறது. குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கின்றன. குஞ்சுகள்  பெற்றோரின் சிறகின் கதகதப்பில் உறங்கும் அழகு அற்புதம்.  இன்னும் ஒரு மாதம் இருக்கிறது அந்த குஞ்சுகள் தன் சிறகை விரித்து பறக்கும்


இது ஒரு சாதராண புறாக்களின் விளக்கமாகும் இதை விட (அடுத்த பதிவில்)

Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger