News Update :
Home » » முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருவம் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருவம் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Penulis : anpusanthosh on Wednesday, July 17, 2013 | 9:11 AM

முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படும் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமை
ச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று அம்மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். 

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளை  கேட்டறிந்துகொண்ட அமைச்சர், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள மீனவர்களில் நீண்டகாலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழில் புரியும் 58 மீனவர்களுக்கு மாத்திரமே இங்கு  தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ஏனைய மீன்பிடித் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் சங்கு, அட்டை தொழில் செய்பவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாதென்பதால் ஒருவார காலத்திற்குள் இது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். 

இச்சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள், பொலிஸ், கடற்படை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடித் தொழிற்சங்க பிரதிநிதிகள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கு, அட்டைத் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டன
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger