News Update :
Home » » அச்சு இயந்திர வளர்ச்சி

அச்சு இயந்திர வளர்ச்சி

Penulis : anpusanthosh on Friday, June 15, 2012 | 9:30 AM


அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படும் முன் மனித இனத்துக்கு ஏற்பட்ட அறிவு நஷ்டம் எவ்வளவு என்று கணக்கிட இயலுமா? அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் பல பிரதிகள் தயாரிக்கும் முறை மிகவும் எளிதாகி விட்டது. ஒரு புத்தகத்தின் ஆயிரக் கணக்கான பிரதிகளை தயாரிப்பது மிகச் சாதாரண வேலையாகிவிட்டது.
இன்று தினமும் கோடிக்கணக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், வாரப் பத் திரிகைகள், வாழ்த்து மடல்கள், காசோலைகள், நோட்டுகள் முதலி யன அச்சிடப்படுகின்றன. முதன் முதலாக அச்சுமுறை தோன்றிய நாடு சீனா. கி.பி., 868ம் ஆண்டில் மரம் அல்லது உலோகத்தில் எழுத்துக்களை பொறித்து முதன் முதலாக சீனாவில்தான் புத்தகம் அச்சிடப்பட்டது.

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனியை சேர்ந்த ஜான்கூடன்பர்க் என்பவரால் முதன் முதலாக அச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டது. ஆயினும் 1476ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் காக்சைடன் என்பவரால் முதன்முதலாக வெற்றிகரமான அச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இந்த துறையின் வளர்ச்சி மெதுவாக இருந்து வந்தது.  ஆனால், 19ம் நூற்றாண்டில் நீராவி இயந்திரம், மின்சாரம் ஆகியவை கண்டு பிடிக்கப் பட்டதால் அச்சுத் துறையில் வெகு வேகமாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

இதே காலத்தில் "டைப்' அச்சு கோர்க்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தினால் டைப்ரைட்டரில் டைப் செய்யப்படுவதை போல அவ் வளவு விரைவாக அச்சுகோர்க்க முடிந்தது. இதற்கு முன்பு கைகளால் பல மணி  நேரம் வேலை செய்து அச்சுக் கோர்க்கும் பணிதான் நடந்தது.
இந்தியாவை போன்று பல வளர்ச்சியடையாத
 நாடுகளில்  இன்றும் சில இடங்களில் கையால் அச்சு கோர்க்கும் அச்ச கங்கள் இயங்குகின்றன.


இன்று அச்சடிக்க பல நவீன முறைகள் வந்துவிட்டன.இக்காலத்தில் அச்சடிக்கப் பயன்படும் இயந்திரங்களை நான்கு பிரிவுகளில் அடக்கலாம்

1). காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம் (வுசநயனடந ழக Pடயவநசள அயஉhiநெ)
2). உருளை அச்சு இயந்திரம் (ஊலடiனெநச அயஉhiநெ)
3). சுழல் அச்சுப்பொறி இயந்திரம் (சுழவயசல  அயஉhiநெ)
4). எதிரீட்டு அச்சிடும் இயந்திரம் (ழுககளநவ Pசiவெiபெ அயஉhiநெ)        என்பனவாகும். 


1). காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம்
  • காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரங்கள் தொடக்கக் காலங்களில் காலால் மிதிக்கப்பட்டு இயக்கப்பட்டன. மின்வசதி இல்லாத இடங்களில் இத்தகைய அச்சு இயந்திரங்களே பயன்படுத்தப் படுவதற்கு ஏற்றனவாக இருந்தன. மின்வசதி பெற்ற ஊர்களில் பின்னர், காலால் மிதித்து இயக்குவதற்குப் பதிலாக மின்சாரத்தால் அவை இயக்கப்பட்டன. இவ் வகை ‘டிரெடில்’ இயந்திரங்கள் மேலும் இரண்டு பிரிவு களில் உருவாக்கப்பட்டன. அவை:
    1)
    சிறிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரம் (Light Platten)
    2) பெரிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரம் (Heavy Platten)


2). உருளை அச்சு இயந்திரம்
  • உருளை அச்சு இயந்திரம் புத்தக வேலைகளைச் செய்வதற்குப் பெரிதும் பயன்படுகின்றது. இவ்வகை இயந்திரங்கள் மூன்று வகை களில் பகுக்கப்படுகின்றன. அவை:
    1)
    நின்று சுழலும் அச்சு இயந்திரம் (Stop Cylinder)
    2)
    ஒற்றைச் சுற்று இயந்திரம் (Single Revolution Cylinder)
    3)
    இரட்டைச் சுற்று இயந்திரம் (Two Revolution Cylinder)

     

     என்பனவாகும். இவ்வகை இயந்திரங்களின் மூலம் ஒரே நேரத்தில் குறைந்தது எட்டுப் பக்கங்கள் வரை அச்சிடலாம்.


    3). சுழல் அச்சுப்பொறி இயந்திரம் 
  • சுழல் அச்சு எந்திரம் (Rotary) என்பது அச்சுத்தொழிலில் பயன்படும் ஓர் எந்திரமாகும். இவ்வகை அச்சு எந்திரத்தில் பெரும்பாலும் பத்திரிக்கைகளே அச்சிடப்படுகின்றன. இதில் முடுக்கப்பட்ட அச்செழுத்துத் தட்டுகள் சமதள வடிவில் இல்லாது உருளை வடிவில் இருக்கும் . இரு எழுத்து உருளைகளுக்கு இடையே செல்லும் தாளில் இருபுறமும் ஒரே சமயத்தில் அச்சாகும். அச்சிட வேண்டிய தாளும் பெரும் உருளையொன்றில் சுற்றப்பட்டிருக்கும். உருளைகள் விரைந்து சுழல்வதால் வேகமாக அச்சிடலாம். மணிக்கு நாற்பதாயிரம் படிகளுக்கு மேல் அச்சிட இயலும். அச்சாகும் தாள்களை வேண்டிய அளவில் தானே வெட்டி மடித்து வெளியே அனுப்பிவிடும் எந்திரங்களும் உள்ளன.



















4). எதிரீட்டு அச்சிடும் இயந்திரம்
  • அமெரிக்காவைச் சேர்ந்த சிக்காகோ நகரில் அச்சடிப்பாளன் அச்சடித்துக் கொண்டிருந்தபோது காகிதத்தின் மீது விழவேண்டிய அச்சுப்பதிவு எதிர்பாராத விதமாக அங்கிருந்த ரப்பர் போன்ற பொருளின் மீது விழுந்தது. அதன் மூலம் ‘ஆப்செட்’ இயந்திரம் கண்டுபிடிக்க வழிபிறந்தது.
    ஆப்செட் அச்சிடும் இயந்திரம் தற்கால நவீன அமைப்பு முறைகளில் ஒன்றாகும். இந்த இயந்திரத்தில் அச்சு உலோகப் படிவத்திலிருந்து (metal Plates) மெதுவாக ரப்பர் தகட்டிலும் (Rubber blankets) அதிலிருந்து காகிதத்தின் மீதும் படிகள் எடுக்கப்படுகின்றன. இம்முறைக்கு ஆப்செட் அச்சிடும் முறை என்று பெயர்.
     



Share this article :

+ comments + 1 comments

March 5, 2022 at 5:06 AM

Acer-Stone - The Art of Sterling Art - TITONIA
A titanium septum ring ceramic titanium linear compensator glass plate that is approximately 3 inches in diameter and black titanium wedding bands about 50 inches in diameter. It mens titanium earrings is made titanium iphone case in Solingen, Germany and has a unique $34.00 · ‎In stock

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger