News Update :
Home » » தந்தையர் தினம்

தந்தையர் தினம்

Penulis : anpusanthosh on Saturday, June 30, 2012 | 9:48 AM


அன்னையர் தினம் வரும், பின்னே..... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்?பசுவின் கன்றை மகன் தேரிலிட்டுக் கொன்று விட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் புகழ் நிலைக்கவோ இந்தத் தந்தையர் தினம்! பற்று, பாசம், நேசம், உறவு இப்படி இல்லாமல் வயதுக்கு வந்து விட்டால் தாய் தந்தையைப் பிரிந்து தனித்து வாழுகிறதும், அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமான உலகத்தில் என்று வாழுகிறதாகப் பலர் கருதுகிற அமெரிக்கத் திருநாட்டில் தான் இந்தத் தந்தையர் தினம் தோன்றியது!


வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862-ல் நடந்த போரில் கலந்து கொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனே (ளுpழமயநெ) வுக்கு குடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும் போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்தார். அவரை மறுமணம் செய்து கொள்ள சிலர் முன்வந்த போது மறுத்து விட்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்று செல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி விடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல், சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே... பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார்.
அருமைக் கணவர் இருக்கும்போதே மனைவி இன்னொருவருடன் வாழ்வதும், வாழ்ந்தால் உன்னோடுதான் என்று கைப்பிடித்த மனைவி இருக்கும் போதே கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதும் அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் அசாதாரணமாக இருக்கிற போது தம் தந்தையின் வாழ்க்கையை மிகப் பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் - மகள் ஸொனோரா ஸ்மார்ட் டோட்! (ளுழழெசய ளுஅயசவ னுழனன ) திருமதி.டோட் அது மட்டுமல்ல, தமக்காக வாழாமல் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையைக் கௌரவிக்க வேண்டும் என்று எண்ணினார்.


அந்தக் கௌரவமும் தம் தந்தையோடு நின்று விடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்கும் அந்தக் கௌரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19 ம் தேதியை தந்தையர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1909 ம் ஆண்டு எழுப்பினார். அவரின் கோரிக்கை கரு மெல்ல உருப் பெற்று 5 வருடங்கள் கழித்து 1924ல் அதிகார வர்க்கத்தின் செவிகளில் விழுந்தது. அமெரிக்காவின் அன்றைய அதிபர் கால்வின், திருமதி.டோட்டின் யோசனையை நான் ஆதரிக்கிறேன் என்றார். 1926ல் நியூயார்க் நகரில் தேசிய தந்தையர் தினக் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதன் பின் அந்த விசயம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டு தந்தையர் தினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது.அதன் பிறகும் அரசு அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்றுக் கிழமையை 'தந்தையர் தினம்' என அறிவிக்கலாம் என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார். அதற்குப் பத்து வருடங்கள் கழித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் 'தந்தையர் தினம்' அனுசரிக்கஆணை பிறப்பித்தார். தனது கோரிக்கைக் கனவு பலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி.டோட், அவரின் கனவு நனவான போது அதைப் பார்த்து சந்தோஷப்பட அவர் உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் 'தந்தையர் தினம்' என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை அவரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்து வாழ்த்துவதும், பிள்ளைகள் சிவப்பு ரோஜாவை தங்கள் சட்டையில் அல்லது தலையில் செருகிக் கொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்!அப்பா இயற்கை எய்தி விட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிக் கொள்வது வழக்கம் இவை எல்லாவற்றையும் விட அப்பா உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? ஏன் நேசிக்கிறேன் தெரியுமா? என்று சொல்லி ஆரத்தழுவுவது வழமையான பழக்கங்களுள் முக்கியமான ஒன்று!

எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள். இராத்தூக்கம் பகல் தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்! கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன்னை ஆளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்கள் கண்களைக் கலங்கவைக்கும்.நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை எண்ணிப்பாருங்கள்; நாளை இந்தச் சமுதாயம் உங்களைக் குறிப்பிடும் போது என்ன சொல்லும்?
தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி..எல்லோரும் தாய்த்திருநாடு என்னும் போது அவர் மட்டும் ஏன் தந்தை என்று சொன்னார்.?ஆம் தாய் என்று சொன்னால் அன்பு வந்துவிடும் ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் நமக்கு வீரம் வேண்டியிருந்தது ஒரு சக்தி தேவைப்பட்டது அது யாரால் நமக்கு கொடுக்கமுடியும் ஒரு தந்தையால் அல்லவா அது முடியும்.
எனக்கு என்னமோ தாயை மிக உயர்த்தி பேசும் இந்த சமூகம் அதற்கு சமமாக தந்தையை பார்ப்பததாக தெரியவில்லை. என்னைப்பொறுத்த வரையில் தாயை  விடவும் தந்தை நமக்காக தியாகங்கள் நிறைய செய்கின்றார் என தோன்றுகின்றது

'தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்'
என்று கவிஞர் வாலி பாடியது போல் தகப்பனின் சுமை ஆயுசு வரையில்.
'குழந்தை பாரம் உனக்கல்லவா குடும்பபாரம் எமக்கல்லவா'
இன்று தந்தையர் தினம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் காதலர் தினம் எத்தனை பேருக்கு தெரியாது என்று எனக்கு உறுதியாகத் தெரியும். சிலர் சொல்லுவார்கள் தந்தையர் தினம் மேற்கத்தியருக்குத்தான் அதை ஏன் நாம் கொண்டாட வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் காதலர் தினமும் மேற்கத்தியருக்காகத்தான் அதை நாம் கொண்டாடும் போது இதையும் கொண்டாடத்தான் வேண்டும்.
தந்தை என்பவர் நமக்கு உயிர் கொடுத்தவர். மக்களுக்கும் விலங்கினத்திற்கும் உயிர் கொடுத்தவர் கடவுள் என்றால், நம் தந்தையும் நமக்கு கடவுள் தான். இப்பொழுது எத்தனை பேர் தன் தந்தையை மதிக்கிறார்கள்? 'போங்கப்பா உங்களுக்கு ஒன்னும் தெரியாது!!' இதைத்தான் நாம் சொல்கிறோம். 'அவர் பழைய புநநெசயவழைn ஆள்' என்றுதான் சொல்கிறோம். பண்டிகை நாட்களில் தனக்கு கூட புதிய ஆடை எடுக்காமல் தன் குழந்தைகளுக்கு கேட்கும் ஆடையை எடுத்துத் தருகிறாரே, அப்போதாவது அவர் நமக்காக செய்யும் தியாகத்தை நாம் உணர்கிறோமா?

'மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். '
என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு, தன் தந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த நன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக!!




ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்' என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் காட்டிச் சோறு ஊட்டி பிள்ளைகளை மகிழ்வித்த பெற்றவர்களின் பிற்காலம் ஊட்டி, ஊட்டி வளர்த்த அந்தப் பிள்ளைகளினால் கண்களில் ஒளியையே இழந்து கண்ணீரில் முகம் கழுவ வைக்கப்படுகின்றனர். கலங்கித் தவிக்கின்றனர்.

நவீன யுகத்தில் சில போலியான வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப அல்லது கட்டியவளின் கண்டிப்பான கட்டளைக்கு இணங்க பாசத்தில் கலப்படம் கலந்து தாய், தந்தையரின் உள்ளத்தில் மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இவ்வாறான பெற்றோர்கள் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களாக பிள்ளைகளின் கண்களுக்கு உறுத்தப்படுகின்றனர்.

காலூன்றி, கையுயரும் வரை பராமரிப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எல்லா வசதிகளுக்கும் பெற்றோர் தேவைப்படுகின்றனர். ஆனால், சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் இவர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?

தாய், தந்தையரின் கருத்துகள் கூட பெரும்பாலான பிள்ளைகளிடத்தில் அரங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத அரளிப் பூவாக இருக்கின்றன. இவர்களின் பேச்சுகள், புத்திமதிகள், கருத்துகள் குடும்ப சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சாதாரண நண்பர்களுக்கு அல்லது மூன்றாம் நபருக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூடத் தாய், தந்தையருக்குக் கொடுக்கப்டுவதில்லை. மாறாக அவர்களின் இதயங்களில் இரத்தத்தைக் கசியச் செய்கிறார்கள்.

இதனால்தானோ முதியோர் இல்லங்கள் முந்திக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன? மேலும் சில பிள்ளைகள் பெற்றோரை தம்முடனேயே கண்ணும் கருத்துமாகத் வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேறு உறவினர்கள் அல்லது சகோதரர்கள் வீட்டில் இருந்தாலும் கரிசனையுடன் தம்முடனேயே வைத்துச் சோறு போடும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள்தான் தனிக் குடித்தனம் செய்பவர்கள். சுய நலத்துக்காகச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெற்றோர்களை வாங்கிக் கொள்கின்றனர்.

உதாரணங்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேலைக்குச் செல்லும் தம்பதி என்றாலும் அல்லது கணவன் மாத்திரம் வேலைக்குச் சென்றாலும் மனைவிக்கு ஒத்தாசை பேரன், பேத்திகளை பராமரித்துப் பாதுகாப்பது, வீட்டுப் பாதுகாப்பு என்ற சுயநல எண்ணம்.

2. பெற்றவர்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற சமுதாயத்தின் குற்றச் சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வது.

3. வேலையாளுக்குக் கொடுக்கும் பணம் மீதமாவதுடன் வேலைகளையும் பொறுப்புகளையும் வயதானவர்களின் தலையில் சுமத்தி விட்டு இவர்களுக்கு ஓய்வு எடுக்க ஒரு நல்ல வசதியான சந்தர்ப்பம்.

4. மூன்றாம் நபரை வைத்துக் கொண்டு வீணாகச் சந்தேகப்படுவதனை விட பெற்றோருக்கு முதலிடம் என்ற போலிப் போர்வையில் பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது. எனத் தொடர்ந்து கொண்டே போகலாம்.

இதுவும் ஒரு மறைமுகமான முதியோர் இல்லம்தான் என்பதனைப் பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். நம் பிள்ளைகள், பேரன், பேத்தி என வெகுளித்தன அறியாமையினால் தொடர்ந்து கடை வழிகளிலும் சமையல் அறைகளிலும் பாடசாலை என்றும் வயது போன காலத்தில் தாய், தந்தையர் சீரழிகின்றனர். கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் பிள்ளைகளின் விரல் நுணி அசைவை எதிர்பார்த்து நின்ற பெற்றோர் பாவப்பட்ட ஜெகன்மங்கள்தான். பெற்றேர்களைத் தன்னுடன் வைத்துக் கொள்கின்றேன் என்ற போர்வையில் சிறை வாசத்தைக் கொடுக்கும் இவர்கள், சகல வேலைகளையும் அட்டை இரத்தம் உறுஞ்சுவது போல் தமது பெற்றோரிடமிருந்து உறுஞ்சி விடுகின்றனர். வயது போன காலத்தில் ஓய்வாக, சந்தோஷமாக, அமைதியாக இருக்க நினைத்தாலும் வீட்டுச் சூழல் அவர்களைத் தட்டி எழுப்பி விடுகிறது. தள்ளாத வயதிலும் அன்பினாலும் கருணையினாலும் பாசத்தினாலும் மென்மேலும் தம் குழந்தைகளுக்காகப் பாடுபடுகின்றனர்.

தொடர்ந்து பிள்ளைகளுக்கும் பரம்பரைகளுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தியாகத்தில் தாய், தந்தை முழுமையான திருப்தி கண்டாலும் பிள்ளைகள் சுயநல திருப்தியே பெறுகின்றனர். (விதி விலக்கான உண்மையான பாசமான சில குழந்தைகளும் உள்ளனர்)

நாம் பிள்ளைகளைப் பராமரித்தது போன்று எதிர்காலத்திலும் பிள்ளைகள் நம்மை பராமரிப்பார்கள் என்று நம்புவது சேற்றில் காலை விடுவதற்குச் சமன். அனாதைகளைப் போல் அவலத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் பெற்றோர்களே அதிகம். இயலாத காலத்தில் என்னவெல்லாமோ எண்ணி, ஏங்கிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், சில பிள்ளைகள் தம்முடைய சில சுயநலத் தேவைகளுக்காக தன்னை வளர்த்து ஆளாக்கிய பேற்றோரை விட்டு விலகுவதும் அல்லது அதற்கேற்றாற் போல் போலித்தனமான நொண்டிக் குற்றச்சாட்டுகளைக் கூறி தமது பிழைகளை மறைக்க பெற்றோர்கள் மீது பழி சுமத்தி மெல்ல, மெல்ல விலகி ஒதுங்குவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.

இதற்குத்தான் கூடிய வயதுடன் வாழ்வதனை ஒரு சாபமாகப் பெற்றோர் நினைக்கும் அதே வேளை, அதிகளவு வயது வாழ்வு பிள்ளைகளையும் எரிச்சலடைய வைக்கிறது. முகம் சுழிக்க வைக்கிறது. அதிகளவு முதுமை இவர்களை ஒதுக்குப் புறமாக ஒதுக்கி வைக்கிறது. இவர்களின் ஓரிரு வார்த்தைகளைக் கூடச் செவி கொடுத்துக் கேட்கவும் நேரமிருக்காது. தமக்கும் என்றாவது ஒருநாள் இந்த நிலை நேரும் என்பதனை பிள்ளைகள் எண்ணிப் பார்ப்பது இல்லை.

மேலும் பிள்ளைகளின் சில நடவடிக்கைகள், அழுத்தங்கள் போன்றன இவர்களுக்கு மன உளைச்சலைத் தோற்றுவித்து உளவியல் ரீதியில் நோய்களை ஏற்படுத்துகிறது. தளர்ந்த நரம்புகளில் இறுக்கமான வார்த்தைகளினால் நிலை குலைவையும் உண்டாக்குகிறது. பாதுகாப்பற்ற நிலையினால் பதறித் தவிக்கின்றனர். சில பெற்றோர்களுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன என்ற போர்வை இருந்தாலும் பேச்சுத் துணை இல்லாத தனிமையில் மனம் பாதிக்கப்பட்டு புலம்பலாக மாறுவதும் உண்டு. அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிக் கலங்குவது கண்ணீரை வரவழைக்கும்.

சகல சௌகரியங்களுடனும் மதிப்புடனும் வாழ்கின்றனவர்கள் கர்வப்படலாம்...... பெற்றவர்கள் அருகில் பூப்போல் இருந்தால் மாத்திரமே! அப்படி அமையாதவிடத்துப் பிள்ளைகள் எல்லாம் 'விமோசனம் இல்லாத சாபத்துக்குரிய நோயை'ப் போன்றவர்கள்.

நாம் பெற்றோர்களிடத்தில் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட கல்விமான்களுடனும் புத்தி ஜீவிகளுடனும் செல்வந்தர்களுடனும் நட்புப் பாராட்டி, சீராட்டினாலும் பெற்றவர்களின் பிரார்த்தனைதான் இம்மையிலும் மறுமையிலும் அங்கீகிரிக்கப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரைத் திட்டுவது, வீட்டை விட்டுத் துரத்துவது, அவர்களை ஒதுக்கி வைப்பது, வேலைக்காரர்கள் போல் நடத்துவது இப்படிப்பட்ட பெரும்பாவங்களை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து முகங்சுழிக்கும் உரிமை கூட எமக்கு இல்லை. அவர்களை இதயத்தில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை. நோய்வினை செய்யாமல் இருந்தால் போதும்.

Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger