News Update :
Home » » ஏன் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடினேன்? மணிமாறன் விளக்கம்!!

ஏன் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடினேன்? மணிமாறன் விளக்கம்!!

Penulis : anpusanthosh on Saturday, July 13, 2013 | 9:37 AM

வேல்ஸ் இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடிய மணிமாறன் சடாச்சரமூர்த்தி. தனது தந்தையை கொலைசெய்தது இலங்கை அரசாங்கமே என்று நேற்று கருத்து வெளியிட்டார் பிரித்தானிய மண்ணில் city’s Swalec Stadium தில் இடம்பெறும் கிரிக்கட் போட்டியில் எதிர்ப்பை வெளிப்படுத்த மணிமாறன் சடாச்சரமூர்த்தி (42) ஜூன் 20ம் திகதி வேல்சுக்கு சென்றுள்ளார். இந்த போட்டியின் போது இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

 இலங்கையில் தமிழர்கள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று ஒரு முன்மொழியப்பட்ட தமிழீழ புலி கொடியினை போர்த்திக்கொண்டு ’’40000 பேரை கொன்ற இலங்கை அரசாங்கம்’’ என்ற பதாதையினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் திடீரென இருவர் ஆட்டத்தின் போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியது பொது ஒழுங்கை பாதிக்கும் செயல் என்பதால் பொது ஒழுங்கு சட்டத்தின் 5ம் பிரிவில் குற்றம் என்று வேல்ஸ் நீதிமன்ற நீதிபதி மார்டின் பிரவுன் கூறினார். வேல்ஸ் இல் அமைதியான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது அதை தொடர்ந்து
லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் பொது வன்முறைகள் இடம்பெற்றது அதே வாரத்தில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.. மேலும், சடாச்சரமூர்த்தி மணிமாறன் குற்றவாளி என்றும் மேலும் குற்றம் சுமத்தப்பட்ட 6 எதிர்ப்பாளர்களுக்கும் செப்டம்பரில் தங்கள் விசாரணை முடியும் வரை எந்த தேசிய அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தால் வழங்கிய தமிழ் மொழி பெயர்ப்பாளர் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றமையால் 9வதாக குற்றம் சுமத்தபட்டவர் மனு சமர்ப்பிக்க முடியாமல் போனதால் வழக்கு ஜூலை 23ம் திகதி வரை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சடாச்சரமூர்த்தி மணிமாறன் என்பவர், தவறான பெயரையும் பிறந்த திகதியையும் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் அதாவது 2006ம் ஆண்டு நீதிமன்றத்துக்கு கொடுத்து நேர்மையற்ற முறையில் நடந்துள்ளார் என்று வழக்கறிஞர் David Cooke தெரிவித்தார். சடாச்சரமூர்த்தியிடம் நீதிபதி பிரவுன், எதற்காக ஆட்டத்தின்போது மைதானத்திற்குள் ஓடினீர்கள் என்று கேட்ட போது, அவர் தெரிவித்ததாவது “வடக்கு கிழக்கில் 2009 இல் இலங்கை அரசாங்கம் போர் பிரகடனம் செய்தது அந்த சமயத்தில் இலங்கை அரசாங்கம் என் தந்தையை கைது செய்து கொலை செய்தது” என்றார். தமிழர்களுக்கு எதிரான குறைகள் எனக்கு நன்கு தெரியும் எனத் தெரிவித்த நீதிபதி, ஜூன் 20ம் தேதி ஆடுகளத்தில் ஓடியது ஏன் என்று தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டார். மேலும் சடாச்சரமூர்த்தி கூறுகையில், அன்றைய தினம் என்னைப் பார்த்து சில சிங்களவர்கள் நீ எந்த சமயத்திலும் சிறிலங்காவுக்கு செல்லமுடியாது. சென்றால் உன்னைக் கொன்றுவிடுவார்கள் என ஆவேசமாக கூறினார்கள். அப்போது நான் கூறினேன் பிரித்தானிய ஒரு ஜனநாயக நாடு அவர்கள் எனக்கு ஒன்றும் செய்ய விடமாட்டார்கள் எனத் தெரிவித்த நான் புலி கொடியுடன் ஓடினேன் என்றார்.
நீதிபதி விசாரித்தபின் 250 பவுண்ட்ஸ் ஐ அபராதம் விதித்ததோடு £ 85 நீதிமன்ற செலவுகள் மற்றும் £ 25 பாதிக்கப்பட்ட செலவு என்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்தோடு அவருடன் கைதான குமார் பாலச்சந்திரன்(23), சுகிதர்சன் கார்த்திகேசு(25), திலக்‌ஷன் குலசிங்கம்(19), கெளசானந்த் மகேஸ்வரன்(20), சிவேந்திரன் நடராஜா(24), தயாளன் ரட்ணம்(31) ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என வேல்ஸ் இணையச் செய்திகள் தெரிவித்துள்ளன.
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger