ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் 1556இல் அரசரானார். நிர்வாகத் திறமை, தற்துணிவு, அரசியல் ஆளுமை, தந்திரோபாயங்கள், அரசனுக்குரிய குணாம்சங்கள் என்பன இவரிடம் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு சமயங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்ய முனைந்தார். ஹிந்துக்களைம் முஸ்லிம்களையும் இணைக்கும் நோக்குடன், பல புதிய திட்டங்களை தமது சுய விருப்புக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்த முனைந்தார். அவ்வாறான திட்டங்களில் ஒன்றாக விளங்கியதே. ‘தீனே இலாஹி’ எனும் அக்பரின் முக்கிய, புதிய சமய நோக்காகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டைத் தகர்த்தெறியும், முற்றிலும் அதற்கு விரோதமான, முரணாக அமைந்த அவரது சமய நடைமுறைகளால் ஹிந்துக்கள் முகலாய ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தனர். அவர், இந்துக்களைத் திருப்தப்படுத்துவதற் காக இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து ஆடசியை ஸ்திரப்படுத்தினார். எனவே, முஸ்லிம்கள் அக்பரின் புதிய சமயக் கோட்பாட்டை ஏற்கவில்லை. மறுத்து விமர்சித்தனர்.

அக்பரின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல உள்நாட்டுக் கலவரங்களும் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன. எனினும், விரைவில் இந்தியா மலைத் தொடருக்கு வடக்கே உள்ள முழு இந்திய உப கண்டப் பிரதேசத்தையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
மகா அக்பர் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அவரையே முகலாயப் பேரரசின் உண்மையான ஆரம்பகர்த்தா எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எனினும், இஸ்லாமிய அறிஞர்களாலும், மக்களாலும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். இஸ்லாத்தைப் பின்பற்றவோ, வளர்க்கவோ இவர் முனையவில்லை. மாறாக இஸ்லாமியப் போதனைகளை இந்துக்களின் திருப்திக்காக விட்டுக் கொடுத்தார்.
மாமிச உணவுகளை இந்துக்கள் புசிப்பதில்லை என்பதற்காக தானும் ஒதுக்கி வாழ்ந்தார்.
முஸ்லிம்கள் இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது. எனினும், அக்பர் 1562ல் பீகாரிமாலின் இந்து மகளை கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
தனது வீட்டில் இந்து மத வழக்கங்களையம், சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றியதோடு, நாட்டு மக்களையும், பின்பற்றச் செய்தார்.
அவர் இறுதித் தீர்ப்பு நாள், இறுதித் தீர்ப்பு நாளில் இறந்த உயிர்கள் மீண்டும் எழுதல் போன்றவைகளை மறுத்தார்.
மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.
பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.
அரசியல், சமூகப் பங்களிப்பு:
அக்பர் மன்னராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதும், உள்நாட்டுக் கலவரங்களையும் கிளர்ச்சிகளையும் அடக்கி, அமைதியை நிலை நாடினார். அவர் கால ஆட்சியில் பல அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளை பி;ன்வருமாறு நோக்கலாம்.
பாதைகள் பலவற்றை அமைத்து, வர்த்தகத்தை விருத்தி செய்தார்.
வரி அறவிடும் முறைகளை முற்றாகச் சீர்திருத்தினார்.
அடிமைத்தனத்தை இல்லாதொழித்தார்.
விதவைகள் உடன் கட்டையேறும் கொடூர வழக்கத்தை தடை செய்தார்.
விதவைகள் மறுமணம் செய்ய வழிவகுத்தமை முதலியன அக்பர் செய்த மிக முக்கியமான பணிகளாகும்.
அத்தோடு பனாராஸிலும், பிருந்தாவனத்திலும், இரண்டு அழகிய கோயில்களை அக்பர் அமைத்தார். கோயில் கட்டிக் கொடுத்ததுடன் இவர் இஸ்லாம் தடை செய்த சிலை வணக்கத்தை ஆதரித்தார். அக்பர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆக்ரா கோட்டையின் ஜஹாங்கீர் மஹாலில் இந்துக்களின் சிற்பக்கலையும் இடம்பெற்றிருந்தது. இவரின் ஆட்சிக் காலத்தில்தான் இந்துஸ்தானி இசை முக்கியத்துவம் பெற்றது. இன்னும், இவர் காலவதை போன்று, ஏனையோர் காலத்தில் இசைக் கலை முக்கியத்துவப்படுத்தப்பட வில்லை.
கல்வி பெறாத பாமரனாக இருந்த போதிலும், அக்பர் தனது தீட்சண்யமான புத்தி, கூர்மையான சிந்தனை என்பவற்றின் மூலம், அபார திறமையுடன் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சி சுமார் 49 வருடங்கள் நீடித்தது. அவர் 1605இல் தனது 63வது வயதில் காலமானதும், அவரது மூத்த மகனான ஸலீம் என்பவர் ஜஹாங்கீர் என்ற பெயரில் அரசரானார்.
49 வருடங்கள் ஆட்சி செய்த அக்பர், பல்வேறு அரசியல் சமூகப் பங்களிப்புக்களை மேற்கொண்டாலும், அவரது செயற்போக்கு, கொள்கை என்பன கடுமையான கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகின. செய்க் அஹ்மத் ஸிர்ஹிந்தி போன்றவர்கள் மன்னன் அக்பரின் கொள்கை கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்தனர். செய்க் ஸிர்ஹிந்தி பற்றி மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடும்போது, அக்பரின் மறுபக்கத்தையும், அதனை ஸிர்ஹிந்தி எதிர் கொண்ட பாங்கினையும் விரிவாக விளக்குகின்றார்கள்.
இயற்கையிலேயே முஸ்லிம்களை கருவறுக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்திய இந்து வெறியர்கள், முஸ்லிம்கள் மீது துவேஷத்தை கிளப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதும் இந்துவெறியர்கள் ஒரு முஸ்லிம் மன்னரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு பின்னணி இருக்க வேண்டும். இந்தியக் குடியரசு தலைவர் அபுல் கலாம் அவர்கள், தனது பேட்டியில் "நான் இந்து வேதமான பகவத் கீதை முழுவதையும், இதிகாசங்களான இராமாயனம், மகாபாரதம் ஆகிவற்றையும் படித்துப் பார்த்துள்ளேன்" என்று பேட்டி அளித்துள்ளார். தனக்கு வழிகாட்டியாக பகவத்கீதையை ஆக்கிக் கொணடேன் என்று பகிரங்கமாக கூறும் குடியரசு தலைவர் ஐயர் அபுல் கலாம் அவர்கள் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பு பல கோயில்களுக்கு சென்று, அங்குள்ள பூசாரிகளிடம் ஆசிர்வாதம் பெற்று, தனது வெற்றிக்கு அதுவும் போதாது என்று கருதி, சங்கராச்சாரியிடம் சென்று கூணி குறுகி மண்டியிட்டு அமர்ந்து ஆசிர்வாதம் பெற்றதை உலகமக்கள் அறிவர்.
இந்த ஐயர் அபுல் கலாம் அவர்கள் குர்ஆனைப் படித்துப்பார்த்ததாக ஒரு பேட்டியிலும் குறிப்பிட வில்லை என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். அவ்வாறு கூறுவதை தனது தகுதிக்கு இழுக்கு என்று கருதுகிறார் போலும். "இந்த அபுல் கலாமைப்போன்று தான் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இருக்க வேண்டும்" என்று இந்து வெறியர்கள் உபதேசம் செய்கிறார்கள்.
ஒரு முஸ்லிமை இந்திய இந்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில், இந்துக்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவன் சரியான இந்திய முஸ்லிமாக கருதுப்படுவதில்லை.
இதே காரணம்தான் அக்பரை இவர்கள் புகழ்வது. முகலாய மன்னர் அக்பரை இந்து வெறியர்கள் மனதார புகழ வேண்டும் என்றால் அவரது ஆட்சி அந்த இந்து வெறியர்களை திருப்திபடுத்தும் வகையில் இருந்திருக்க வேண்டும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த செய்திகளைத்தான் இந்திய வரலாற்று ஏடுகளில் காண முடிகிறது.
வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை வணக்கம் செலுத்தினால் போதும் என்றும் போதனை(?) செய்து வந்தார் அந்த அக்பர் பேரரசர்.
5. இறைச்சிக் கடைக்காரர், மீனவர்கள், பறவைகளைப் பிடிப்பவர் ஆகியோரின் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
Post a Comment