லேப்-டாப் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் லலிதா தேவி, 28, மாற்றுத் திறனாளி; பிளஸ் 2 வரை படித்துள்ளார். டெய்லரிங் வேலை பார்த்துக்கொண்டே, குழந்தைகளுக்கு டியூசனும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
பிரபு – லலிதா தேவி இருவரும், ஐந்தாம் வகுப்பு முதல் குறிச்சி அரசு பள்ளியில் படித்தனர். அப்போதிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல, அதுவே காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை, இருவரும் நேற்று பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்.
“”நண்பர்கள் உதவியால் தான் எங்கள் திருமணம் நடந்தது. பெற்றோருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர்களை சம்மதிக்க வைத்து, அவர்கள் ஆசியுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்றார், பிரபு.
home
Home
Post a Comment