News Update :
Home » » பாரம்பாரியத்தின் உணர்ச்சி

பாரம்பாரியத்தின் உணர்ச்சி

Penulis : anpusanthosh on Saturday, December 17, 2011 | 10:06 AM




பாரம்பாரியத்தை கட்டி காப்பது தமிழனின் மரபுரிமைப் பண்பு . அவ்வகையில் இக்கலையினை கற்று கொண்ட வீரர்களின் அனுபவத்திலிருந்து இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. சமூகத்தில் இவ்வாற்றுகையானது ஒரு புதிய தேடலை தந்திருக்கின்றது. குறுகிய காலப்பகுதியில்  நாம் கலந்து இவ்வாற்றுகை அரங்கேறியதென்பது “ஒரு எல்லையிலே நிற்கின்ற இராணுவ வீரனை விரட்டியடித்து அந்த இடத்தினை கைப்பற்றியபோது ஒரு போராளிக்கு இருக்கும் மகிழ்ச்சியை கொடுப்படுபோல் எனக்கும் இவ்வாறு மகிழ்ச்சியை தந்தது” என்கின்றார் இதனைப்பழகிய மாணவன் ஜெகன் மேலும் இப்பறையின் மூலம் பறைசார்ந்த தாளக்கட்டுக்கள் பலவகையான ஆட்டங்கள், குழுவாகச்செயற்படும் தன்மை போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன் என்கின்றார்.
இதைவிட மேலும் ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் ஒரு புதையலைக்கண்டு எடுக்கும் விவசாயியின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாம் பர்iவையாளரின் கைகளில் இருந்து வந்துபோன கரகோசத்தில் இருந்து இந்த மகிழ்கச்சியை நாம் பெற்றுக்கொணN;டாம் என்கின்றார் உற்சாகத்துடனும் புன்சிரிப்புடனும் ;மேலும் இந்திய சுற்றுப்பயணத்தில் வெறும் பார்வையாளராக இருந்த என்னை குரு வேணு இன்று என்னை ஆடவைத்துள்ளார் என்கிறார் தட்சா ஊடக மாணவர்களுக்கு இக்கற்கையை கற்பதென்பது ஒரு வரப்பிரசாதமாகும். சக மாணவர்களுடன் ஆடும்போது அவர்களுடைய அசைவையும் கவனித்து ஆடவேண்டும் இதன்போது தொடர்பாடலும் விருத்தியடைந்தள்ளது எனவும் கூறுகின்றார்.
நீண்டகாலமாக வாழ்வியலோடு சம்மந்தப்பட்ட கிராமியக்கலை யாழ் மண்ணில் இல்லாமல் அழிந்து போயிடிச்சு இப்ப ஆடல் அரசு எங்கட யாழ்ப்பாணத்தில் இதைப் பழக்கி ஆடவைத்துள்ளார் என்கிறார் இந்து . இப்போ யாழ்ப்பா ணத்தில் பல்வேறு நவீனத்த வங்கள் நிகழ்ந்து வருகின்ற வேளையிலே இந்தக்க லையை நாம் கற்று ஆடுவதென்பது மிகவும் சிறப்பான ஒன்றே. என்னதான் சினிமாவில் பல்வேறு ஆட்டங்கள் கூத்து க்களை பார்த்தாலும் நாம் பயின்ற இந்தக்க லையானது புனிதமா னதாகவும் தமிழரின் பாரம்பரியத் தை எடுத்து விளக்கு வதாகவும் அமைந் துள்ளது என்கின்றார். மேலும் நாம் பார்வையாளருக்கும் அந்த பார்வைளாளர் கண்களுக்கும் சிறந்த விருந்து கொடுத்திருப்பதையே இதனை ஆடி முடித்தவுடன் எனக்கு தோன்றுகின்றது

பழகும்போது பயம்தெரி யவில்லை அரங்கேறப் போகின்றோம் என்பதும் ஒருவித பயம் அரங்கேறியதும் அந்தப்பயம் எல்லாம் பறந்து விடுகின்றது என பகிடியாகவும் கூறுகின்றார் சந்திரகுமார் தர்சன். நிறையக்கூத்துக்களையும் ஆடல்களையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம் ஆனால் இப்போது நேரில் அதைப்பயின்று ஆடும்போது எங்களுக்குரிய வெட்கம் பயம் எல்லாம் இல்லாது போய்விட்டது எனவும் கூறுகிறார்


மேலும் பறை பழகிய மாணவனான சுரேஸ் இந்தியாவில் பார்க்கும்போது இந்தக்கலையை எப்படி ஆடுவது என ஏங்கினேன் ஆனால் அதை வேணுஅண்ணா இலகுவாக ஆடுவதற்கு பயிற்றுவித்தார் எனவும் கூறுகின்றார் . ஆடலும் மேடையில் அரங்கேறும்போது பார்வையாளர் முன்னால் இருக்கும்போது எனக்குள்ளேயே நான் நன்றாக ஆடவேண்டும் என உற்சாகம் தோன்றுகின்றது எனவும் கூறுகின்றார்.
மேலும் பறையாட்டம் என்ப து பார்வையாளர்களுக்கு இலகுவானதொன்றாகும் ஆனால் அதனை செயலில் ஈடுபடுத்துவதென்பது மிகவும் கஸ்ரம் ஏனெனில் எல்லோருக்கும் கையும் காலும் சேர்ந்து வேலை செய்வது கடினம் அதை எங்களுக்கு எளிதான முறையில் முதலில் காலாட்டம் பின்பு கையில் பறையடித்துப்பழகுதல் பின்பு இரண்டையும் சேர்த்து செய்வது என படிமுறையாகப்பழகியது இலகுவாக இருந்தது என செயற்திறன் அரங்க இயக்கத்தில் பறை பழகிய மாணவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் இவர்கள் கூறுவதெல்லாம் என்னவென்றால் இந்தக்கலையானது தொடர்ந்தும் வளரவேண்;டும் இதனை நாம் தொடர்ந்து செய்யவேண்டும் இத்துடன் இது முடிவடையக்கூடாது எனவும் கூறுகின்றார்.




Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger