News Update :
Home » » வடமாரட்சி கிக்கு நாகர்காவில

வடமாரட்சி கிக்கு நாகர்காவில

Penulis : anpusanthosh on Monday, October 10, 2011 | 4:35 AM




வடமாரட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தன் ஒரு பகுதி தற்பொழுது முழுமையாக கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளானர். தஃ424 கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசமே இவ்வாறு கண்ணி வெடி அகற்றப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளது.


     இப்பிரதேசம் 1995ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் அகற்றப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டமையாகும். இவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் வன்னி மற்றும் யாழ் மாவட்ட ஏனைய பிரதேசங்களில் வசித்து வந்தானர். யுhழ்ப்பாணம் படையினரால் கைப்பற்றப்பட்ட முதல் இப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு காணப்பட்ட இப்பிரதேசம் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகள் அமைப்பதற்கான 12 தகரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கப்படவில்லை.என மக்கள் தெரிவித்தானர். இது பற்றி தஃ424 பகுதி கிராமசேவையாளரான சே. பாலசுந்தரம் அவர்களை கேட்டபோது நாங்கள் தற்போது மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் விபரங்களை திரட்டுகின்றோம். மேலும் படையினருடன் இணைந்து வெடிப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகளை நிகழ்த்தி வருகின்றோம். இது தவிர மலசலகூடம் அமைப்பதற்கு சில நிறுவனங்களை கேட்டுகொண்டுள்ளதாகவும். ஆத்துடன் குடிநீர் வசதிக்கான ஏற்காடுகளையும் சேவலங்கா உதவியுடன் செய்து வருகின்றோம் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவாகளின் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக முடிந்தளவு உதவிகளைச் செய்து வருகின்றேன் எனக் குறிப்பிட்டார் எனவே இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளில் கூடியளவு அக்கறையுடன் செயற்பாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger