News Update :
Home » » ஒரு பழங்குடியினரின் முன்னேற்றம்

ஒரு பழங்குடியினரின் முன்னேற்றம்

Penulis : anpusanthosh on Monday, January 2, 2012 | 10:13 PM

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சமுக மட்டத்திலே தாழ்ந்த மட்டத்தில் இருந்த ஓரு சமுகம் பற்றிய ஓர் தேடலாக இக்கட்டுரை அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.நீலகிரி மாவட்டத்தில் 07 வகையான இனத்தை சேர்ந்த பழங்குடியினர் வாழ்கின்றார்கள். அவர்களில் இருளர் குறும்பர் கட்டக்குறும்பர் ஆகிய முன்று இனத்தையும் சேர்ந்த பெண்களுடன் எனது கலந்துரையாடலை மேற்கொண்டேன். இவர்களின் கலச்சாரம் பழக்கவழக்கம் வாழ்க்கை முறை போன்றவற்றை மேம்படுத்த ச.அமுதா என்ற பெண்மணி 15 வருடங்களாக சமுக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். இவர்களது வாழ்ககை முறை தற்போது உயாந்துள்ளது. இதே சமுகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியராக வந்திருந்தமை கண்டு கொண்டோம்.

             

               இதே போன்று வைத்தியர் தாதியார்களா கவும் உள்ளனராம். இவர் களது மதச்சடங்கு திருமண முறைகள் பற்றி குறிப் பிட்டானர். ஆன்மா ஒடுங் கும் இடம் தான் ஆலயம் இந்த ஆலயங்களுக்குள்ளே செல்ல இப் பெண்களுக்கு அனுமதியில்லை.    
ஆலயத்தின் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கல்லொன்று நாட்டப்பட்டிருக்கும் இக்கல்லைத் தாண்டி பெண்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது. எமது சமூதாய மரபுகளின் படி எல்லாவற்றிற்கும் மேலாக முதல் நாம் வணங்குவது கடவுளை ஆனால் இவர்களோ தமது மூதாதையரை வணங்கி அவர்களை வழிபட்ட பின் இராண்டாவதாகத் தான் கடவுளை வழிபடுகின்றனர். இவர்களுக்கு மரணம் சம்பவித்தால் எமது முறைகளைப் போல சில இறப்புக் காரியங்களை நிறைவு செய்த பின்னர் அவர்களை அடக்கம் செய்வார்கள். கிரேக்கத்தில் காணப்பட்டது போன்று இறந்தவர்களை வழிபட்டால் அவர்களின் உடல் பாகங்களை உட்கொண்டால் அதித சக்தி கிடைக்கும் என எண்ணி இறந்தவர்களின் பாகங்களை உண்டனர். அவர்களைப் போல இவர்கள் இல்லா விட்டாலும் அடிப்படைப் பண்பான நம்பிக்கை இறந்தவர்களினால் அதிக சக்தி கிடைக்கிறது என்பதிலிருந்து பிறக்கிறது.
இவர்கள் தமது இனத்தை விட்டு வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்தால் இறுதி வரை ஏற்றுக்கொள்ளாத நிலை இன்றும் உள்ளது. ஏட்டுக்கல்வியறிவில்லா நாட்டுப்புறங்களில் தொன்று தொட்டு வழக்;கிலிருந்து வரும் பாடல்கள் நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப்பாடல்கள், பாமர பாடல்கள் என்றொல்லாம் கூறப்படுகின்றது. இறைவனின் எழில் ஓவியங்களாக பரந்து விரிந்து கிடக்கும் கிராமங்களில் வாழும் மக்களையும் அவர்களின் மரபு மொழி நடை, பழக்கவழக்கம், பண்பாடு, நம்பிக்கை, சமய கலாசாரம், தொழில், வேடிக்கை வினோதம், கலை இலக்கியம், பண்பாடுகளை பிரதிபலிக்கும் பிம்பங்களே கிராமியப் பாடல்கள். இத்தகைய பாடல்கள் இருளர், குறும்பர் இனத்தவர்களும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
ஒரு மனிதனினால் மொழியை உருவாக்குவது ஒரு முடியாத காரியம் இன்று அப்படி உருவாக்கினாலும் அதற்கு எழுத்து வடிவம் கொடுப்பது இன்னும் கடினம் குறும்பர், இருளர் ஆகியோருக்கும் ஒரு வகையான மொழியிருந்தாலும் எழுத்து வடிவில் இம் மொழியில்லை. இதனால் காலப்போக்கில் இவர்களது மொழி அழித்து போய்விடுமோ என்பது கேள்விக்குரியவுள்ளது.நாட்டின் வளர்ச்சியில் தனித்துவம் மிக்கவர்கள் என்று பல நாடுகளிலும் போற்றப்படும் ஆண் சமூகம் இவர்கள் இடத்தில் இரண்டாவதாகவே பார்க்கப்படுகிறுது. இதனால் தான் பெண்கள் குடும்பத் தலைவியாக இருப்பார்கள். இவர்கள் பெண் வழிச் சமூகம் ,தந்தை வழிச் சமூகம் என்று சொல்வதில்லை. பெண்களே நாட்டின் கண் மணிகளாகவுள்ளார்கள் இவர்களிடத்தில். 
இன்று திருமண வயதை அடைத்ததும் பலர் திருமணம் செய்யாத நிலையிலுள்ளார்கள் இதற்கு அடிப்படைக் காரணம் வரதட்சனையாகும். இவ்வரதடசனை வழங்குவதில் எல்லாப் பெற்றோர்களுக்கும் வசதி வாய்ப்புக் கிடையாது இதனால் பிள்ளைகளும் வாழ்க்கைத் துணையில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இவர்களுடைய சமூகத்தில் வரதட்சனையே  மாமியார் கொடுமையோ இல்லை. இனி வரும் காலங்களில் ஆண்களுக்கு திருந்த வழிகாட்டியாக இது போன்ற சமூதாயம் உருவாகலாம்.
இவர்கள் வீட்டிற்கு வருபவர்களை திண்ணையில் வைத்துத் தான் கதைப்பார்கள் உள்ளே விடமாட்டார்கள். அது யாராக இருந்தாலும் சரி அறைக்குள் அமர விட மாட்டார்கள். இவர்களுடைய தொழில்களாக விறகு பொறுக்குதல், வேட்டையாடுதல், சாணி பொறுக்குதல் என்பனவற்றையே பிரதான தொழில்களாகக் கொண்டிருந்தனர். முன்பு சமூகத்தில் உயர்ந்த நிலையினுள்ளோரின் வீட்டில் வீட்டு வேலைக்காரர்களாக பிரதான தொழிலாக இதனையே செய்தார்கள். இன்று இந் நிலைமாறி வீட்டு வேலைகளைச் செய்வதை பகுதி நேர வேலையாகச் செய்து வருகின்றனர்.மாறிவரும் காலத்தில் ஏற்ப இந்த பழங்குடியினரும் தம்மை மாற்றியமைக்க முயன்றுள்ளனர். இதனால் இன்று குறும்பர், இருளர் யாவரும் ஒரளவிற்கு எழுத்தறிவு, வாசிப்பு வீதத்தினைப் பெற்றுள்ளனர். இவர்கள் தமக்கான ஒரு மொழியிருந்தாலும் தமிழையே கதைத்து தேர்ச்சியுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இவர்கள் சமூகத்திலிருந்து வைத்தியர், சட்டத்தரணி, தாதியர், ஆசிரியர் பல் துறைகளிலும் உருவெடுக்கின்றனர். காலப்போக்கில் இவர்களின் கல்வி முறையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும்.
இந்தியாவின் சனத்தொகை பெருகிக் கொண்டு வருவதற்கு “குடும்பக் கட்டுப்பாடு முறைமை பின்பற்றப்படாமையே” காரணம் என பல ஆய்வாளர்கள் சுட்டிக் காடடியுள்ளனர். இக்கட்டுப்பாட்டு முறைமையை கடப்பிடிக்க கல்வியறிவு வீதம் போதியளவு மக்களுக்கு இன்மையால் சனத்தொகைப் பெருக்கத்தில் கவனமின்னையுள்ளது. ஆனால் குறும்பர், இருளர் குடும்பக் கட்டுப்பாட்டு முறைமையை பின்பற்றி வாழ்கின்றார்கள். இதற்கு காரணம் அவர்களின் கல்வியறிவு வீதமே.
முன்பு பழங்குடியினரை அந்த நாட்டுச் சமூகம் தள்ளி வைத்தாலும் இன்று அவர்களின் மகத்துவம் அறிந்து அவர்களுக்கு பல உதவிகளை வழங்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆரம்பத்திலிருந்து இன்று வரை பழங்குடியினத்தவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் கத்தோலிக்கச் திருச் சபை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது சாதி  விட்டு சாதி இவர்களது திருமணத்தில் இல்லையாம். மேலும் இவர்கள் தற்காலத்தில் வேட்டையாடுவது இல்லையெனவும் அதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டானர். இவர்களில் பெரும்பலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை புரிவோர்கள். துமிழ் கதைக்கத்தெரிந்தவர்கள் இவர்களது குடும்பத்தின் தலைவனாக பெண்ணே காணப்படுகின்றாள். ஆயினும் அரசாங்கமானது இவர்கட்கு நில ஓதுக்கீட்டை வழங்கவில்லையெனவும் தற்பொழுது தாம் தங்கியிருக்கும் பிரதேசத்தை விட்டு எழுமாறும் அரசாங்கம் பணிப்பதாக கூறுகின்றானர். இவர்களது வழக்கப்படி பெண்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதியில்லை. வேற்று மனிதர்கள் வீடுகளினுள் நுழைய அனுமதியில்லை. மிகுந்த காட்டுப்பட்டுக்களுடன் வாழ்வதாக அறிய முடிந்தது. இதை அடுத்து இவர்கள் தங்களது கும்மிப்பாட்டை பாடி ஆடிக்காட்டினார்கள். இதை அடுத்து முற்றம் கலைக்குழுவினர் தமது கிராமிய நடனத்தை ஆடி மகிழ்வித்தானர். ஆதன் பின்னர் பழங்குடி மக்கள் வாழும் பகுதியை சென்றடைந்து பார்வையிட்டோம்
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger